மேலாகா : "குர் ஆனில் கூறியபடி, நாட்டில் உள்ள பிற மதத்தவர்களுக்கு, முஸ்லிம் மக்கள் மதிப்பளிக்க வேண்டும்' என, மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
மலேசியாவின் ஜசீன் பகுதியில் மசூதி ஒன்றை திறந்து வைத்து பேசிய அந்நாட்டு பிரதமர் நஜீப் துன் ரசாக் கூறியதாவது:முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பிற சமுதாய மக்கள் ஆகியோர் இடையேயான நல்லுறவிற்கு இஸ்லாமிய கொள்கைகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அதற்கான சிறந்த சான்று நபிகள் நாயகம் . அவர், பிற மதத்தவர்களுக்கு எப்போதும் மதிப்பளித்தவர். குர் ஆனில் , பிற மதம் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை அலட்சியப்படுத்துவதற்கு எதிரான வாசகங்கள் உள்ளன. நாம் பிற மதத்தவர்களின் வழிபாட்டு, தலங்களை கொளுத்தினால், அவர்களும் அதை திருப்பி செய்வர். எனவே, முஸ்லிம் மதத்தவர்கள் பிற மதத்தவர்களுக்கு மதிப்பளித்தால், அவர்களும், மதிப்பளிப்பர். மலேசிய நாட்டின் கொள்கை சமூக நீதி மற்றும் மதக் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது. இவ்வாறு நஜீப் துன் ரசாக் கூறினார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment