Thursday, February 25, 2010

இன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா? , போ, போ

கையில் கிடைத்ததை வைத்து மனநோயாளி வரைந்த ஓவியம் : குட்டிசுவரில் குவிந்த ரசிகர்கள்
 

Human Intrest detail news ராமநாதபுரம் : இடிந்த சுவரில் கையில் கிடைத்தவற்றை கொண்டு மனநோயாளி ஒருவர் வரைந்த தத்ரூபமான ஓவியத்தை காண, ஏராளமானோர் குவிந்ததால் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத் தில் புண்ணிய தலங்களுக்கு நிகராக மனநோயாளிகளின் எண்ணிக்கைக் கும் பஞ்சமிருக்காது. இது போன்ற நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு "ஸ்பெஷல்' தன்மை இருக்கும். அந்த வகையில் ராமநாதபுரத்தில் சிறிது நாட்களாக சுற்றித்திரியும்,தஞ்சாவூரை சேர்ந்த சதானந்தம் என்ற மனநோயாளியின் செயல், நேற்று பலரையும் சிந்திக்க வைத்தது. ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை அருகே உள்ள இடிக்கப் பட்ட கட்டடத்தில் சில நாட்களாக முடங்கிய,



இவரின் நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. "என்ன தான் உள்ளே நடக்கிறது, என, பார்க்க அந்த இடிந்த கட்டடத்தில் உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும் தான். ""இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பகுதியின் வழித்தடத்தில் சிலர் நடந்து செல்வதை போல'' தத்ரூபமான ஓவியம் ஒன்று அந்த சுவரில் வரையப்பட்டிருந்தது. கையில் கிடைத்த செங்கல், செடிகளின் இலை, குச்சிகள், கட்டைகள் போன்றவற்றை கொண்டு அந்த ஓவியத்தை சதானந்தம் வரைந்ததை கண்டு அங்கு கூடியவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் காட்டு தீ போல பரவ,பலரும் ஆர்வமுடன் வந்து அந்த ஓவியத்தை பார்த்து ரசித்து, போட்டோ எடுத்து சென்றனர். இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓவியத்தல் மறுதிசையில் அமர்ந்திருந்த சதானந்தத்திடம், ""சார், வாங்க உங்களுக்கு சாப்பாடு வேணுமா? என்ன வேணும் கேளுங்க,'' என, ஒருவர் கேட்டார்.



""இன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா? , போ, போ, போய் வேலையை பாருங்க...,'' என, தனக்கே உரிய பாணியில் தத்துவம் கசிந்தார் சதானந்தம். "திறமைக்கு "மனம்' ஒரு பொருட்டல்ல,' என, பலரும் முணுமுணுத்தபடி களைந்தனர்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails