இந்தோனேஷியாவில் ஒருவர் பிடித்த சிகரெட் திடீரென வெடித்ததால் அவரது 6 பற்கள் கீழே விழுந்ததுடன், வாயில் 51 தையலும் போடப்பட்டது. ஜகர்த்தாவில் வசித்து வரும் அண்டி சுசந்தோ (31) என்பவர் சிகரெட் பிடித்தபடியே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாயில் இருந்த சிகரெட் திடீரென வெடித்தது. இதில் அவரது ஆறு பற்கள் கீழே விழுந்ததுடன், வாயும் சின்னாபின்னமாக பிளந்துவிட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வாயில் 51 இடங்களில் தையல் போடப்பட்டது. தனது பள்ளி பருவத்திலிருந்தே சிகரெட் பிடித்து வருவதாகவும், தற்போது நிகழ்ந்த சம்பவம் தமக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் சுசந்தோ கூறியுள்ளார். இதனிடையே இந்தோனேஷியாவைச் சேர்ந்த 'நூஜாரானோ டொபாக்கோ' என்ற நிறுவன தயாரிப்பு சிகரெட்டைத்தான் சுசந்தோ பிடித்ததாகவும், எனவே அந்நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் சுசந்தோவின் குடும்பத்தினர் கோரியுள்ளனர். ஆனால் அவ்வாறு நஷ்ட ஈடு ஏதும் தர முடியாது என்றும், தங்கள் நிறுவன தயாரிப்பு சிகரெட்டில் வெடி பொருட்கள் ஏதும் கிடையாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் சிகரெட் எதனால் வெடித்தது என்ற காரணத்தைக் கண்டறிய காவல் துறையினர்தான் மண்டையை பிய்த்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். source:z9world |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment