பேஸ் புக் இணையத்தள சமூக வலைப் பின்னலில் உள்ள இலங்கை வாடிக்கையாளர்களை இலங்கை அரசு கண்காணித்து வருவதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடந்த முறைகேடுகள் உட்பட இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள பலர் பேஸ் புக்கை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள பேஸ் புக் பாவனையாளர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது.
பேஸ் புக் என்பது இணையத்தளம் மூலம் இயங்கும் ஒரு சமூக வலைப் பின்னலாகும், இதனூடாகப் பலசெய்திப் பரிமாற்றங்களும், புகைப்படங்களும் பரிமாறப்படுவதுடன், பல உறவினர்கள் நண்பர்கள் இதில் பின்னி இணைந்திருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்குச் செல்லும் செய்திகள் நம்பகத்தன்மை உடையவையாகக் கருதப்படுகின்றது.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment