Wednesday, February 24, 2010

ஒரு நாள் போட்டியில் 200 ரன் அடித்து சச்சின் புதிய உலக சாதனை

 
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர்,ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி  ஆகியோரின் சாதனையை இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மே சச்சின் தெண்டுல்கர் முறியடித்தார்.

 
அன்வர், 1997ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 194 ரன்கள் (146 பந்து, 22 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார்.

புலவாயா நகரில் வங்கதேச அணிக்கு எதிராக ஆகஸ்ட் 16ஆம் தேதி நடந்த 4-வது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே வீரர்  சார்லஸ் கவன்ட்ரி 194 ரன்கள் குவித்து அன்வரின் சாதனையை சமன் செய்தார். இதன் மூலம் அன்வரின் 12 ஆண்டுகால சாதனையை சமன் செய்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.


ஆனால் இன்று 24/2/2010 நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சச்சின் எல்லா சாதனைகளையும் முறியடித்து ஒரு நாள் போட்டியில் முதல் வீரராக 200 நன்கள் அடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார்.மேலும் தொடர்ந்து விளையாடிவருகிறார்.மேச்சை நேரடியாக கான கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails