இலங்கைக்கு ரஷியா ஆயுத உதவி; உடன்பாடு கையெழுத்து
மாஸ்கோ, பிப். 10-
2-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றபின் இலங்கை அதிபர் ராஜபக்சே முதன் முறையாக ரஷியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மத்வதேவை சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு ரஷியா ரூ. 1,500 கோடி (300 மில்லியன் டாலர்) மதிப்புள்ள ஆயுதங்களை 10 ஆண்டு கால தவணையில் கடனுக்கு வழங்க ஒப்புக்கொண்டது. இதற்கான உடன்பாட்டில் ராஜபக்சேவும், மத்வதேவும் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் இலங்கைக்கு ரஷியா ராணுவ ஹெலிகாப்டர்களையும், அதிநவீன ஆயுதங்களையும் வழங்க உள்ளது. முன்னதாக ரஷியா சென்ற ராஜபக்சேவுக்கு அதிபர் மத்வதேவ் சிறப்பான வரவேற்பு அளித்தார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து கூறினார்
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment