Monday, February 15, 2010

சிதம்பரம் ஆக்ஷனுக்கு பதிலடி:நக்சல்கள் 25 ராணுவ வீரர்களை கொன்றனர்

மாவோ., நக்சல்கள் வெறி., ராணுவ வீரர்கள் 25 பேரை கொன்றனர் ; சிதம்பரம் ஆக்ஷனுக்கு பதிலடி என கொக்கரிப்பு 

Top world news stories and headlines detail 

 



இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியையொட்டியுள்ள பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட் , ஒரிசா, மேற்குவங்கம் ஆகியபகுதிகளில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள மாவோயிஸ்ட் நக்சல்கள் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை தந்து வருகின்றனர். இவர்களை அழிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிகாரிகளை கடத்தி சென்று கொலை செய்வது போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தீ வைப்பது , மற்றும் போலீஸ் இன்பார்மர்களை கொலை செய்வது இவர்களது முக்கிய செயல்பாடாக இருந்து வருகிறது.



முதல்வர்கள் மாநாட்டில் ஆலோசனை : நக்சல்கள் அட்டூழியத்தை ஒடுக்க ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற பெயரில் ஒரு குழு அமைத்து செயல்பட ராணுவ வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிறப்பித்தார். இதன்படி ராணுவ வேட்டை நடந்து வருகிறது. இந்த ஆபரேஷனுக்கு நக்சல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நக்சல்கள் 72 மணி நேர பந்த் அறிவித்தனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு பிரதமர் தலைமயில் நடந்த அந்நாளில் பல்வேறு தாக்குதல்களை நக்சல்கள் நடத்தினர். ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன. இந்நாளில் ஒரிசா, பிகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்களிடம் நக்சல்கள் கொட்டத்தை ஒழிக்க என்ன வழி என தனியாக ஆலோசனை நடத்தினார்.



இந்த ஆலோசனை முடிந்த 6 நாளில் மேற்குவங்கம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் சில்தா என்ற பகுதியில் துணை ராணுவ படையினர் முகாம் மீது நக்சல்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இங்கு அதிகாலை 5 .30 மணி அளவில் இந்த அதிரடி சம்பவம் நடந்துள்ளது.



இன்று நடந்தது என்ன ? : இது குறித்து இப்பகுதி மாவட்ட மாஜிஸ்திரேட் என்.எஸ். நிகாம் கூறியதாவது: இங்கு சுமார் 50 பேர் நக்சல்கள் 25 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இவர்கள் முகாம் உள்ளே புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். வீரர்கள் தங்களுக்குரிய உணவு சமைத்து கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளன. நக்சல்கள் கையில் இருந்த துப்பாக்கி மூலம் 5 பேரை சுட்டு கொன்றனர். பின்னர் தீ வைத்துள்ளனர். இதில் சிக்கி 9 வீரர்கள் பலியாயினர். தொடர்ந்து அங்கிருந்த ஏ.கே.,47 ரக துப்பாக்கி உள்பட முக்கிய ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் சுமார் 20 பேர் இறந்து விட்டனர். இன்னும் எத்தனை பேர் காயமுற்றுள்ளனர் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. சம்பவம் நடந்த பகுதிக்கு ராணுவ உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.



நக்சல் ‌தலைவன் கொக்கரிப்பு : இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மாவோ., நக்சல்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து மாவோ., தலைவர் கிஷன்ஜி கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் சிதம்பரம் எங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மத்திய அரசு மனித நேயத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருகிறது. இது போன்ற இந்த நடவடிக்கைக்கு இந்த தாக்குதல் வழியாகத்தான் நாங்கள் பதில் சொல்வோம். இத்தாக்குதலும் அப்படித்தான். இன்னும் எங்கள் அதிரடி தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.


source:dinamaalr


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails