முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைக்குண்டு தாக்குதல் மூலம் அவரை கொல்லமுடியவில்லை. ஆனால், பொன்சேகாவினால் தண்டனை பெற்ற இராணுவ அதிகாரி மானவடுவை அனுப்பி கைது என்ற பெயரில் சரத் பொன்சேகாவை கேவலமான முறையில் நடத்தி, உலகெங்குமுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.
.இவ்வாறு தெரிவித்துள்ளது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சரத் பொன்சேகா இந்த நாட்டில் 30 வருடங்களாக நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டுவந்தவர் மட்டுமல்ல. கடந்த அரசதலைவர் தேர்தலில் நாட்டிலுள்ள 42 லட்சம் வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் தலைவர். அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஒருவரை அரசாங்கம் கைது செய்வது என்ற பெயரில் இழுத்து சென்று விசாரித்துவருவது அருவருக்கத்தக்கது.
அரச அடக்குழுறைக்கு இலக்காகியுள்ள பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு நாட்டு மக்கள் கிளர்ந்தெழவேண்டும். அரசின் இந்த தாான் தோன்றித்தனமான செயற்பாட்டை எதிர்க்கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன - என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment