லத்தீன் அமெரிக்கா, பிப். 9-
அமெரிக்க கண்டத்தில் கோஸ்டாரிகா நாடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் தேசிய விடுதலை கட்சியின் சார்பில் போட்டியிட்ட லாரா சின்சிலா வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கோஸ்டாரிகா நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் வருகிற மே மாதம் 8-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்கிறார்.
50 வயதான இவர் அரசியல் அனுபவம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே இவர் தற்போது அதிபராக இருக்கும் அரியாஸ் அமைச்சரவையில் மந்திரி உள்ளிட்ட பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்சிலாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் அவர் பேசினார்.
அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். வார்த்தகத்தை பெருக்க தீவிர முயற்சி மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment