விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வினியோகம் சிங்கப்பூர் எதிர்க்கட்சி தலைவர் கைது
கோலாலம்பூர், நவ. 4-
சிங்கப்பூர் எதிர்க்கட்சி தலைவர் ராகவன் என்கிற பால்ராஜ் நாயுடு. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது ராகவன் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆயுதங்களை கொள் முதல் செய்து கொடுப்பதற்காக ராகவன் சிங்கப்பூர் தொழில் அதிபர் ஹனிபா உஸ்மான் என்பவரை தனக்கு உடந்தையாக வைத்துக் கொண்டு செயல் பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. மேலும் இவரிடம் ஏராளமான வெடிபொருட்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ராகவனை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி கைது செய்தனர். விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தது, வெடி பொருட்கள் வைத்திருந்தது என மொத்தம் 6 புகார்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
2006-ம் ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அவர் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய இதே குற்றச்சாட்டு ராகவன் மீது அமெரிக்காவிலும் உள்ளது. அந்த விசாரணைக்காக அவரை அமெரிக்காவுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது
source:maalaimalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment