பீஜிங்: ""திபெத்துக்கான தன்னாட்சி குறித்து, விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை,'' என்று தலாய்லாமாவின் பிரதிநிதிகளிடம் சீனா உறுதியாக அறிவித்துள்ளது. பீஜிங்கில், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தூதுவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதில்,"சீனாவின் தன்னாட்சிக்கு பாதகமான பிரச்னைகளில் விட்டுக் கொடுத்தல் என்பது கிடையாது' என்று கூறப்பட்டதாக, "ஜின்ஹூவா' செய்தி ஏஜன்சி தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில், தலாய்லாமாவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட லோடி கியாரி மற்றும் கெல்சாங் ஜியால்ஸ்டென் இருவரும் கலந்து கொண்டனர். திபெத்தின் தன்னாட்சி குறித்த தலாய்லாமாவின் கருத்துக்களை முன்வைத்த அவர்களிடம், சீனாவின் இம்முடிவு உறுதியாகக் கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும், தர்ம ஸ்தலாவில் உள்ள தலாய்லாமாவைச் சந்தித்து சீனா கூறியதைத் தெரிவித்தனர். கடந்த 2002ல் இருந்து, சீனாவுக்கும் தலாய்லாமாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தலாய்லாமா மற்றும் சீனா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை, அவர் பிப்ரவரி 16ல் அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு நடக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment