அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிவு; அவரது பேச்சை 4 3/4 கோடி மக்களே கேட்டனர்
நியூயார்க், ஜன. 29-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முன்தினம் அந்நாட்டு பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவரது பேச்சை அமெரிக்காவில் உள்ள டெலிவிஷன்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின. அப்போது, அவரது பேச்சை அமெரிக்கர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். எத்தனை சதவீதம் பேர் அவரது பேச்சை கேட்டனர். என்று நீல்சன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், அவரது செல்வாக்கு சரிந்து இருப்பது தெரிய வந்தது.
ஏனெனில் அவரது சமீபத்திய பேச்சை 48 மில்லியன் (4 கோடியே 80 லட்சம்) பேர் மட்டுமே கேட்டுள்ளனர். புஷ் அதிபராக இருந்தபோது அவரது முதல் பேச்சை 40 மில்லியன் (4 கோடி) மக்களே கேட்டனர். அதே சமயம் ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்து கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஆற்றிய உரையை 62 மில்லியன் (6 கோடியே 20 லட்சம்) பேர் கேட்டனர்.
அதிபராக பதவி ஏற்றவுடன் 1993-ம் ஆண்டு முதன் முதலாக பில் கிளிண்டன் ஆற்றிய உரையை 66.9 மில்லியன் (6 கோடியே 69 லட்சம்) பேர் கேட்டனர். அதிபர் ஒபாமா பதவி ஏற்றவுடன் அவரது முதல் பேச்சை 52.3 மில்லியன் (5 கோடியே 23 லட்சம்) பேர் கேட்டுள்ளனர்.
இதற்கு காரணம் அமெரிக்க மக்களிடையே அதிபர் ஒபாமாவுக்கு உள்ள கோபமே காரணம் என தெரிகிறது. ஏனெனில் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம், அவற்றை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்காதது போன்றவையே காரணம் என கூறப்படுகிறது
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment