Tuesday, July 1, 2008

டீசல் இல்ல, பஸ் இல்ல.. தனியார் கல்லூரிகள் மூடல்

 

டீசல் இல்ல, பஸ் இல்ல.. தனியார் கல்லூரிகள் மூடல்
    

சென்னை: டீசல் பற்றாக்குறை காரணமாக மாணவர்களைக் கூட்டிவர பேருந்துகளை இயக்க முடியாததால் சென்னை மற்றும் புற நகர்களில் இயங்கிவரும் பிரமாண்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிகள் மூடப்படுவதாக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

குறிப்பாக புறநகர்களில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுமே உள்ளூர் மாணவர்களை நம்பி செயல்படுபவை அல்ல. இக்கல்லூரிகளில் 30 சதவிகித மாணவர்கள் மட்டுமே ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரிகள் இயக்கும் வாகனங்களிலும், வெகு சிலர் மட்டும் இரு சக்கர வாகனங்களிலும் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர்.

டீசல் சப்ளை சீராகும் வரை இனி பேருந்துகளை நிறுத்தி வைக்கலாம், கல்லூரிகளையும் மூடி வைக்கலாம் என நிர்வாகங்கள் முடிவெடுத்து அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளன.

எஸ்ஆர்எம் போன்ற பெரிய கல்லூரிகள் மட்டும் தங்கள் கல்லூரி பேருந்துகளுக்கென்று தனியாக வளாகத்துக்குள்ளேயே பங்க் வைத்துள்ளன. அதாவது மொத்தமாக டீசல் வாங்கி இருப்பு வைத்துள்ளன.

ஒரு வேளை இன்னும் சில தினங்கள் இதே நிலை நீடித்தால் அனைத்துக் கல்லூரிகளுமே மூடப்பட்டாலும் வியப்பில்லை.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails