களரி கற்கும் ஜப்பானியர்
கோழிக்கோடு: கேரள மக்களின் வீரத்துக்கு அடையாளமான பழங்கால கலை களரிப்பயிற்று. 9ம் நூற்றாண்டு முதல் பழகப்பட்ட இந்தக் கலையின் நுணுக்கங்கள் காரணமாக உலக அளவில் பேசப்படுகிறது.
தாக்குதல், உதைத்தல், நெருக்குதல், ஆயுதம் ஏந்துதல் உட்பட பல கோணங்களில் களரிப்பயிற்று சண்டை மேற்கொள்ளப்படுகிறது.
பல திரைப்படங்களில் முக்கிய இடம்பெற்றுள்ள களரியைக் கற்பதில் நம்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் ஆர்வம் கொண்டு கேரளாவுக்கு வருகின்றனர். கோழிக்கோட்டில் உள்ள களரி பயிற்சி மையத்தில் ஜப்பானிய இளம்பெண்கள் இருவர் பயிற்சி பெறுகின்றனர்.
No comments:
Post a Comment