' ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கும் ' | |
| |
ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் இந்த ஆண்டு இறுதிக்குள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன் அதிகாரிகள் இவ்வாறு அச்சம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் நாடான்ஸ் அணு உலை அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான அதிகபட்ச யுரேனியத்தை உற்பத்தி செய்கிறது. இதன் மீது 2009ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளுக்கே அது பெரும் ஆபத்தை விளைவிப்பதாய் அமையும். அதாவது இஸ்ரேல், ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தினால், ஈராக், பெர்சிய வளைகுடா ஆகிய பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த புதிய அதிபர் பொறுப்பேற்பதற்குள் இந்த தாக்குதலை நடத்தலாம் என்றும் பென்டகன் கவலை வெளியிட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி மேலும் செய்தி வெளியிட்டுள்ளது. | |
(மூலம் - வெப்துனியா) |
No comments:
Post a Comment