தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக செய்திவெளியான பிறகு, மீடியாக்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார் நக்மா. சொந்த பாதுகாப்பிற்காக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும் செய்தி வெளியானது. தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் டெல்லியில் அளித்த விருந்தில் நக்மா கலந்த கொண்டது இந்தச் செய்தியை உறுதி செய்தது.
ஆனால், அரசியலில் இருந்து ஆன்மிகத்துக்கு மாறினார் நக்மா.ஏசு எனக்கு நிம்மதியளித்தார், அவரைப் பற்றி பேசுவதே இனி எனது முழுநேர வேலை என அவர் கூறியபோது அனைவரும் அதிர்ந்து போயினர். பலரும் இதனை நம்பவில்லை. ஆனால், நக்மாவின் ஏசு பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் நடந்த ஏசு பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் நக்மா. அவரின் பேச்சு பிற மதத்தினரின் குறிப்பாக இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருந்தது என்று கூறி, அதற்கு விளக்கம் கேட்டு பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் நக்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளக்கம் அளிக்காவிடில், அளிக்கிற விளக்கம் திருப்திகரமாக இல்லாவிடில் நக்மா மீது வழக்கு தொடரப்படும் எனவும் மிரட்டியுள்ளார் அந்த பிரமுகர்.
No comments:
Post a Comment