சந்திரனில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கிலான நிலவுப் பயணத்தை மேற்கொள்வது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சந்திரன் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாகவும், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பயிற்சியாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதிய தலைமுறை ராக்கெட் பூஸ்டர்களை வரும் 2010ம் ஆண்டுக்குப் பின் அமைக்கவும் நாசா திட்டமிட்டுள்ளதாக டெலிகிராஃப் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. ``மீண்டும் சந்திரனுக்குச் செல்வோம். ஆனால் இந்த முறை சந்திரனில் குடியிருப்போம். சூரிய குடும்பத்தை சீராக்கும் முயற்சியின் முதல்கட்ட நடவடிக்கை இது'' என்று நாசா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் எஸ். பீட் வோர்டன் தெரிவித்தார். நிலவிற்கு மீண்டும் பயணிப்பது குறித்து விஞ்ஞானிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாட்டில் மேலும் விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. | |
No comments:
Post a Comment