பாக்.கின் எந்த பகுதியையும் தீவிரவாதிகளால் பிடிக்க முடியும் ' | |
| |
பாகிஸ்தானின் எந்த ஒரு பகுதியையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வரக் கூடிய அளவிற்கு இங்குள்ள தீவிரவாத அமைப்புகள் வலுவானதாக உள்ளதாக அந்நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஜாமியாத் உலமா - இ - இஸ்லாம் கட்சித் தலைவர் மவுலானா ஃபஷ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பெஷாவரில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், பாகிஸ்தானின் பல இடங்களில் அரசு நிர்வாகம் முற்றிலும் காணாமல் போய்விட்டதாக கூறினார். எனவே நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை விரட்டியடிக்க தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகளினால் இந்த அளவிற்கு அச்சுறுத்தல் அதிகரித்ததற்கு, இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க தலையீடு அதிகரித்ததுதான் முக்கிய காரணம் என ரஹ்மான் மேலும் தெரிவித்தார். பாகிஸ்தானின் இப்போதைய முக்கிய பிரச்சனை, நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் மக்களிடையே அதிகரித்து வரும் குழப்பம் ஆகியவைதானே தவிர, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியை மீண்டும் பணியில் அமர்த்துவதல்ல என்று அவர் மேலும் கூறினார். | |
(மூலம் - வெப்துனியா) |
Thursday, July 17, 2008
பாக்.கின் எந்த பகுதியையும் தீவிரவாதிகளால் பிடிக்க முடியும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment