பின்லேடனுக்கு தூக்கு : ஒபாமா ஆவேசம் | |
வாஷிங்டன் : அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன் உயிருடன் பிடிபட்டால், தூக்கிலிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டது பின்லேடன் என்றும், எனவே, அவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார். பொதுவாக மரண தண்டனையைத் தான் ஆமோதிக்கவில்லை என்றும், ஆனால், கொடிய குற்றங்கள் புரிந்துவரும் பின்லேடனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். மேலும், ஆப்கான் அதிபர் கர்சாய் மீது, அந்நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அந்நாட்டை சரியாக வழிநடத்த கர்சாய் தவறிவிட்டதாகவும் ஒபாமா குற்றம்சாட்டினார். |
Sunday, July 13, 2008
பின்லேடனுக்கு தூக்கு : ஒபாமா ஆவேசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment