Friday, July 25, 2008

"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய ஒரு "கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை"

"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய ஒரு "கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை"




"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய "ஒரு கிறிஸ்தவனின் பார்வை"

முன்னுரை: கிறிஸ்டியன்ஸ் பார்வை   என்ற தளத்தில், என்னைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது, அதற்கான என் பதிலை இந்த பதிவில் காணலாம். என் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டிருந்த ஒரு அனானிமஸ்ஸுக்கு பதில் அளித்து இருந்தேன், அதைப் பற்றி, விமர்சனத்திற்கு என் பதிலை இந்த பதிவில் காணலாம்.


ChristianPaarvai said:
//

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

முஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்! முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலை குறைந்த தந்திரம் இது.//

Umar said:

நீங்கள் பைபிளை விமர்சிப்பதில்லையா? பைபிளை விமர்சிப்பதை உங்கள் நபி 7ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டாரே?

முஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? சொல்லுங்கள்.

உங்கள் குர்‍ஆன் சொல்வதை, உங்கள் நபி சொல்வதை நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் அறிவேன், அதே நேரத்தில் எங்கள் வேதம் சொல்வதை நம்புவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்.

எங்கள் வேதம் பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது, அதற்கு பதில் தருவதும் எங்கள் கடமை, அதே நேரத்தில் பைபிளை நீங்கள் விமர்சிப்பதால், உங்கள் குர்‍ஆன் பற்றியும் நாங்கள் சில சந்தேகங்கள், உண்மைகளை நாங்கள் சொல்கிறோம், அவ்வளவு தான், இதில் விரோதிப்பதற்கு ஒன்றுமில்லை.

//குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்//

7ம் நூற்றாண்டில் வந்து பைபிள் மீது சேறு வாரி இறைத்தது யார்?
உங்கள் முகமது அன்று ஆரம்பித்த வேலையை இன்றும் செய்துக்கொண்டு இருப்பவர்கள் யார்?
நீங்கள் மட்டும் பைபிள் மீது சேறுவாரி இறைப்பது சரியாகுமா?

நீங்கள் எது சொன்னாலும், கிறிஸ்தவர்கள் சும்மா இருக்கவேண்டும் அதைத் தானே நீங்கள் எதிர்ப்பார்ப்பது? உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது?  கேள்வி கேட்டால், சேறு வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு? இது என்ன நியாயம் என்றுச் சொல்லுங்கள்?


ChristianPaarvai said:
// முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். //


Umar said:

மன்னிக்கனும் நண்பரே மன்னிக்கனும். என்னைப் பொருத்தவரையில், நான் உமர் என்ற பெயர் வைத்துக்கொண்டு யாரையும் ஏமாற்றவில்லை.

1) என் கட்டுரைகளின் தலைப்பிலேயே, என் செய்தியை பெரும்பான்மையாக சொல்லி விடுவேன். "இஸ்லாமுக்கு பதில்/மறுப்பு" என்று தெளிவாக சொல்லிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பதற்கு முன்பாகவே, இது ஒரு இஸ்லாமுக்கு பதில் சொல்லும் கட்டுரை என்ற எண்ணத்தை என் கட்டுரையை வாசிப்பவர்களின் உள்ளத்தில்  கொடுத்துவிடுகிறேன்.உங்களைப்போல, மூல தொடுப்புக்களை கொடுக்காமல், வாசகர்களை வஞ்சிக்கமாட்டேன்.

2)  பெரும்பான்மையாக என் கட்டுரைகளின் முதல் பத்தியிலேயே "முன்னுரை/குறிப்பு" என்று எழுதி, அந்தக் கட்டுரையில் எதைப்பற்றி விவாதிக்கப்போகிறேன் என்று விவரமாக எழுதிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பவர்கள் முதல் பத்தியிலேயே இது ஒரு கிறிஸ்தவ கட்டுரை என்பதை அறிந்துக்கொள்வார்கள். பின் அவர்களுக்கு விருப்பம் இருந்தால், மேலே படிப்பார்கள், வேண்டாமென்றால் விட்டுவிடுவார்கள்.

3) இஸ்லாமியர்கள் சிலர் செய்வது போல, தங்களை கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டு, எனக்கு அறிவுரை சொல்வது போல,  என்னை ஒரு முஸ்லீமாக காட்டிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மற்ற முஸ்லீம்களுக்கு அறிவுரை சொல்வது போல சொல்லமாட்டேன்.  உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் தன்னை கிறிஸ்தவரைப் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளார். இப்படியெல்லாம் நான் செய்வதில்லை.

4) எல்லா கட்டுரைகளிலேயும் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று தான் காட்டியுள்ளேனே ஒழிய, ஒரு முஸ்லீமாக நான் காட்டிக்கொள்வதில்லை.

 

ChristianPaarvai said:
//ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர். //

 
Umar said:
 
என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்று வைத்து என்ன வம்பில் மாட்டிக்கொண்டேன் சொல்லுங்கள் பார்க்கலாம்? யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா?  இந்த உளறும் வேலை என்னுடையது கிடையாது, அதனால், தான் நான் எப்போதும் சொல்வதுண்டு, முஸ்லீம்களை பேசவிடுங்கள், அப்போது தான் உண்மை வெளிப்படும் என்று.

என் தளத்திற்கு ஏன் இந்த பெயர் வைத்தேன் என்று போன வருடமே (செப்டெம்பர் 2007)  நான் ஒரு கட்டுரையை எழுதி அதற்கு பதில் அளித்துள்ளேன்.
பார்க்க:

-----------------

1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன?

என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்.

Sources:
http://isakoran.blogspot.com/2007/09/1.html
http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAUmar/UmarQandA-1.htm
http://tamilchristians.com/modules.php?file=viewtopic&name=Forums&p=5710


நான் என்னவோ, "குர்‍ஆன்" என்ற பெயரையும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே சூரையாடிவிட்டதாக சொல்கிறீர்கள்.

உங்கள் நபி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்திக்கொண்டு, தீர்க்கதரிசிகளில் தான் கடைசியானவர் என்று தன்னை காட்டிக்கொண்டு, இறைவசனம் என்றுச் சொல்லி, முந்தைய வேதங்களில் உள்ளவற்றை ஆங்காங்கே சில விவரங்களைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கும் போது, வெறும் "குர்‍ஆன்" என்ற பெயரும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொள்ள எனக்கு உரிமையில்லையா?

இப்படி பைபிளின் தீர்க்கதரிசிகளின் பெயர்களை சொந்தம் கொண்டாடியது உங்கள் முகமது என்பதை மறக்கவேண்டாம்.

எனவே, 7ம் நூற்றாண்டில் திடீரென்று ஒருவர் வந்து, நானும் ஒரு நபி தான், என்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்த உரிமை உங்கள் நபிக்கு இருக்கும் போது, என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்ற பெயர் வைத்தால், என்ன குடிமுழுகிவிடும் சொல்லுங்கள்.
---------

ChristianPaarvai said:
// கிறித்தவ சபையினரே! கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு? உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. //

Umar Said:

இஸ்லாமியர்களே, உங்கள் நபிக்கு பைபிளோடு சம்மந்தமெதற்கு?  யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு? சொல்லுங்கள்.

என்னவோ, இஸ்லாமிய பெயர் வைத்தால், உடனே முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவது போல கவலைப்படுகிறீர்கள்?

உங்கள் புரட்டுக்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன? பொய்களை அள்ளிவீசுவதில், தில்லு முல்லு செய்வதில் உங்களை யார் ஜெயிக்கமுடியும் சொல்லுங்கள்?

உங்கள் முகமது, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி, உண்மையான தேவனின் தீர்க்கதரிசிகளாகிய மோசே, எலியா, யோவான் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டாரே, இதை விடவா ஒரு புரட்டு இருக்கமுடியும்?

முகமது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லட்டும், அதை நீங்கள் நம்புங்கள், இதில் தவறில்லை, ஆனால், பைபிளைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன அதிகாரம் உண்டு? அவரை மற்றவர்கள் நம்பவேண்ட அவசியமென்ன?

உங்கள் தளத்தின் பெயர் "கிறிஸ்டியன் பார்வை" என்று வைத்துள்ளீர்கள்.

யாராவது முதலாவது உங்கள் தள பெயரைப் பார்த்தால்,  ஏதோ ஒரு கிறிஸ்தவன் தளம் என்று நினைக்கத்தோன்றும். இருந்தாலும், ஏன் வைத்தீர்கள் என்று நான் கேட்கமாட்டேன், ஏனென்றால் பெயரில் ஒன்றுமில்லை, சொல்லும் செய்தியில் தான் எல்லா விவரங்களும் உள்ளன. ஏன் "கிறிஸ்தவன்(ம்)" என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்று உங்களை எந்த கிறிஸ்தவனும்  கேட்கமாட்டான், காரணம், "கிறிஸ்தவம்" என்ற பெயர் வைத்த மாத்திரத்தில், எல்லா கிறிஸ்தவனும் முஸ்லீமாக மாறிவிடப்போவதில்லை.

ChristianPaarvai said:
//உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. //

Umar said:

எங்கள் பெயரை வைத்துக்கொண்டு எழுதவேண்டிய அவல நிலை உங்கள் நபிக்கு உண்டு. யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களை பயன்படுத்தி, தன்னை ஒரு நபியாக, உண்மையான இறைவன் தன்னை தெரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லி தன் விருப்பத்திற்கு ஏற்றார்  போல தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் வசனங்களைச் சொல்லி வாழ்ந்தவர் உங்கள் நபி.  இல்லை இல்லை, முகமது அவர்கள் சொன்னது உண்மையான தீர்க்கதரிசனங்களே என்று நீங்கள் சொல்வீர்கள். நல்லது அது உங்கள் நம்பிக்கை, இதில் தவறு இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களை விமர்சிக்க அவருக்கு ஏது அதிகாரம்?

எங்களுக்கு குறுக்குவழி தேவையில்லை நண்பரே, உங்களுக்குத்தான் குறுக்குவழி தேவையாக உள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனாக மாறினால், அவனை கொள்ளவேண்டும் என்றுச் சொல்லி, சட்டத்தை இயற்றி இஸ்லாமை தக்கவைத்துக்கொள்வது ஒரு குறுக்கு வழி இல்லையா? விமர்சிப்பவர்களை கொன்றுவிட்டால், எதிரியே இருக்கமாட்டான் என்று கொல்வது குறுக்கவழி இல்லையா?

ஒருவன் இஸ்லாமை விட்டு போனால் போகட்டும், குர்‍ஆனுக்கு மனிதர்களை தன்னிடம் இழுத்துக்கொள்ளும் தன்மை உண்டு, உண்மை உண்டு,  எனவே, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளில் சட்டமியற்ற முடியுமா?


நான் இன்று இஸ்லாமுக்கு ஒரு சவால் விடுகிறேன், உலகத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை ஒன்றும் செய்யமாட்டோம் என்றுச் சொல்லி சட்டத்தை இயற்றி வாழ்ந்துப் பாருங்கள், இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு தீங்கை இழக்காமல் இருந்துக் காட்டுங்கள். அப்போது, உங்கள் இஸ்லாமின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்துபார்க்க முடியுமா?

என் கட்டுரைகளில் யார் எழுதுகிறார்கள் என்பதை விட, என்ன எழுதுகிறேன் என்பதைத் தான் வாசகர்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ChristianPaarvai said:
// எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள்! ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள்! உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்?

அனானிமசுக்கு பதில்

இப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

//

Umar Said:

நீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார்? ஆனால், உங்களை யார் நம்புவார்கள்? 

மேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா? உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது?

இப்படி எங்களுக்கு தீங்கிழைப்பது நியாயமா என்று நாங்கள் கேட்டால், "அவர்களுக்கு மார்க்க அறிவு கிடையாது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்" என்று சொன்ன வேதாந்தமே மறுபடியும் சொல்வீர்கள், ஆனால், நஷ்டமடைவது யார்? நாங்கள் தான்.

உங்களால் மேடையில் தான் பேசமுடியுமா? எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா?  வீரர்களாக இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள்.

நாங்கள் கோழைகள் தான், வாளுக்கு, அடிகளுக்கு நாங்கள்(மன்னிக்கனும் முக்கியமாக நான்) பயப்படுகின்றோம். ஐந்தறிவு படைத்த மிருகங்கள் இருக்கும்  காட்டில் யாராவது பாதுகாப்பு இல்லாமல் நுழைய முடியுமா?
 அதுபோலத் தான், நாங்கள் பாதுகாப்பை கருதி மறைந்து எழுதுகிறோம். 

நீங்கள் தான் வீரர்கள் என்றுச் சொல்கிறீர்களே, எழுத்து விவாதத்திற்கு வருவது தானே? முகமதுவின் வாழ்க்கையை உலக மக்கள் அறிய விவாதிப்பது தானே?

உங்களிடம் தான் உண்மை சத்தியம் உண்டே, அப்படியானால், ஏன் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறீர்கள்?

யார் கோழை / யார் வீரன்:
----------------------------------------------

ஒரு சில இஸ்லாமிய தளம் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய தளங்களும், வீராவேசத்தொடு பதில் எழுதுவார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்கள் அதன் தொடுப்பு என்ன? என்று பதிக்கமாட்டார்கள் ஏன்? பயம், எங்கள் கட்டுரைகளை படித்து, உண்மையை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்வார்கள் என்ற பயம்.  அவர்கள் சொல்வது பொய் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அறிந்துக்கொள்வார்கள் என்ற பயம். வீரம் என்பது வெறும் கட்டுரைகளையும், பதில்களையும் எழுதுவது அல்ல, அதற்கு பதிலாக யாருக்கு பதில் எழுதுகின்றோம் என்பதை தொடுப்புடன் எழுதினால், அதைத்தான் வீரம் எனலாம், அதைவிட்டுவிட்டு, நாங்கள் பதில் தருகிறோம் என்று அனானிமஸ்ஸாக எழுதுவதில்லை.


ஆனால், நாங்கள் அப்படி அல்ல, யாருக்கு பதில் எழுதுகிறோம் என்று முஸ்லீம் தளத்தின் தொடுப்பையும் கொடுப்போம், ஏன் தெரியுமா? இஸ்லாமை ஒருவன் அறிய அறிய, அதன் உண்மையை புரிந்துக்கோள்வான், மற்றும் இஸ்லாம் பற்றி சிந்திப்பவன், உண்மையாகவே, அதை விட்டு வெளியே வந்துவிடுவான். அதனால், தான் அமெரிக்காவில் இஸ்லாமுக்கு மாறுபவன் சில ஆண்டுகளிலேயே 75% பேர், இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

அதனால், தான் நாங்கள் எந்த இஸ்லாமிய தொடுப்பையும் கொடுக்க தயங்குவதில்லை. நாங்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கும் கிறிஸ்தவர்களை உங்கள் இஸ்லாமிய கட்டுரைகளை படிக்க உட்சாகப்படுத்துகிறோம், அதனால், தான் இஸ்லாமிய தள தொடுப்புக்களைக் கொடுக்கிறோம்.

உதாரணத்திற்கு, என் தளத்திலோ, அல்லது தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலோ, சென்று பாருங்கள், எத்தனை கட்டுரைகளில் இஸ்லாமிய தள தொடுப்புக்கள் இருக்கின்றன என்று. அதே போல, உங்கள் இஸ்லாமிய தளங்களில் எத்தனை தளங்களில் எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்பை கொடுத்துள்ளீர்கள். இதுவே போதும், நீங்கள் பயந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களுக்கு உங்கள் பலமான இறைவேதம் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது என்று?

எங்கள் நம்பிக்கை என்னவென்றால், இயேசுவின் போதனைகளை படிக்கும் ஒரு கிறிஸ்தவன், பெரும்பான்மையாக முகமதுவின் போதனைகளால் எந்த காலத்திலும் மயங்க மாட்டான் என்ற நம்பிக்கைத் தான். இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு உண்டா? அப்படி இருக்குமானால், எங்கள் தள தொடுப்புக்களை தைரியமாக தாருங்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்,  பல ஆயிர‌ கிறிஸ்தவர்கள் இஸ்லாமை தழுவினார்கள் என்று எழுதுவார்கள், ஆனால், எந்த ஒரு ஆதாரத்தையும் தரமாட்டார்கள்.

இன்னொரு குழு உள்ளது, அவர்கள், ஈஸா குர்‍ஆன் என்ற பெயரையும் எழுத பயப்படுவார்கள், உமர் என்ற என் பெயரையும் பயன்படுத்த பயப்படுவார்கள். "ஒரு கிறிஸ்தவர் எழுதுகிறார்" என்பார்கள், ஆனால், பெயரை குறிப்பிடமாட்டார்கள். இப்படி பயந்துப்போய் கட்டுரையை எழுதுபவர்கள் நீங்கள்.

ஆனால், உங்களிடம்(கிறிஸ்தவ பார்வை தளத்திடம்) நான் எதிர்ப்பார்ப்பது, (நான் பதில் எழுதும் ஒவ்வொரு தளத்திற்கும் இந்த வேண்டுதலை வைத்துள்ளேன், ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு தான்)

உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?

உங்கள் நபி உண்மையிலேயே ஒரு நபி என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?
குர்‍ஆனை யார் குற்றப்படுத்தினாலும், அது செல்லுபடியாகாது, குர்‍ஆன் தான் கடைசியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்?
எங்கள் கட்டுரைகளைப் படித்தால், முஸ்லீம்கள் இஸ்லாமின் மீது சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?

எங்களுக்கு பதில் அளிக்கும் போது, எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்புக்களை வெளியிடுங்கள், பெயர்களை வெளியிடுங்கள். நீங்களும் இப்படி வெளியிடவில்லையானால், உங்களையும் அந்த பட்டியலில் இணைய நண்பர்கள் சேர்த்துவிடுவார்கள், மட்டுமல்ல, இஸ்லாம் ஒரு போலி என்பதை உலகம் இதன் மூலம் அறிய‌ நீங்கள் உதவி  செய்கிறவர்களாக இருப்பீர்கள்.

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கலாம்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails