Monday, July 21, 2008

நம்பிக்கை வாக்கெடுப்பு : நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்

நம்பிக்கை வாக்கெடுப்பு : நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்
டெல்லி : மத்திய அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதை ஒட்டி, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.

அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக்கட்சிகள் அண்மையில் விலக்கிக் கொண்டன. இதனையடுத்து, மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது, இதனையொட்டி பாராளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது மத்திய அரசு மீது நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து, பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அணுசக்தி ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்றும், இந்த ஒப்பந்தம் நாட்டு மக்களின் முழு ஆதரவைப் பெற்ற பிறகே நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். பின்னர், விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வு பிரச்னை போன்றவை பெரிதாக இருக்கும் போது, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் தருவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் விவாதம் தொடர்ந்து நடந்தது.
http://www.kumudam.com

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails