Tuesday, July 8, 2008

அபுதாபியில் 2,300 இந்தியத் தொழிலாளர்கள் கைது!

அபுதாபியில் உள்ள செராமிக் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்திய தொழிலாளர்கள் 2,300 பே‌ர் தரமான உணவு கே‌ட்டு‌ப் போராடியத‌ற்காக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தொழிற்சாலை நிர்வாகம் வழங்கிய உணவு மோசமாக இருப்பதாக‌க் கூ‌றி இ‌ந்‌திய‌த் தொ‌ழிலாள‌ர்க‌ள் வன்முறையில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்திய தூதர் தால்மிஸ் அஹமட் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டபோது வாகனங்களுக்கு தீ வைத்ததாலு‌ம், மரச் சாமான்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாலு‌ம் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கு முன்பும் அரபு நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் மோசமான பணியிடச் சூழல், ஊதியம் இன்மை ஆகியவை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் இம்முறை வன்முறையை ஒடுக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய தொழிலாளர்களில் பலர், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மா‌நில‌ங்களை‌ச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

இந்திய‌த் தொ‌ழிலாள‌ர்க‌ள் கைது செய்யப்பட்டச் செய்தியை உறுதி செய்த அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி, கைது செய்யப்பட்ட இந்தியர்களை விடுவிக்க அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என்றார்.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/08/1080708021_1.htm

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails