Monday, July 14, 2008

துபாயில் மனைவியை அடிக்க உரிமை கோரி வழக்கு

துபாயில் மனைவியை அடிக்க உரிமை கோரி வழக்கு
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

துபாய்: மனைவியை அடிப்பது எனது உரிமை. அதை நிலை நிறுத்தி உத்தரவிடக் கோரி ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புஜைராவில் உள்ள அப்பீல் கோர்ட்டில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுதாரர், தனது மனைவியை அடிக்கடி அடித்துக் காயப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரது கணவர் மீது புஜைரா போலீஸார், முதல் குற்றங்களுக்கான கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், அந்த நபருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பீல் கோர்ட்டில் அந்த நபர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்தான், மனைவியை அடிப்பது எனது உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது. எனவே மனைவயை அடிக்க உரிமை உண்டு என்று அறிவிக்க வேண்டும். அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails