| பூரி ஜெகன்னாதர் கோவிலில் விழா : நெரிசலில் சிக்கி 6 பேர் பலி | | ஒரிஸா மாநிலம் பூரி ஜெகன்னாதர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானார்கள். பூரி ஜெகன்னாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் திருவிழா, இந்த ஆண்டும் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதுமிருந்து சுமார் 10 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற ரதயாத்திரையின்போது ஜகன்னாதர் கோவிலிலிருந்து தேவி சுபத்ரா, தேரில் பவனி வரும் காட்சியை தரிசப்பதற்காக பகதர்கள் முண்டியடித்து வந்தபோது, கூட்டத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவரை ஒருவரை தள்ளிவிட்டு முன்னேறி செல்ல முயன்றபோது, நெரிசலில் சிக்கி 6 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். மேலும் 50 பேர் காயமடைந்தனர். கூட்டம் கடுமையாக இருந்ததால், போலீஸாராலும் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெரிசலில் சிக்கி காயமடைந்த 50 பேரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.இவர்களில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே நெரிசலில் சிக்கி உயிழந்தவர்களில் 3 பேர் ஆண்கள் ; 3 பேர் பெண்களாவர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். | (மூலம் - வெப்துனியா) | | |
No comments:
Post a Comment