உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 7வது ஆண்டாக பெற்றுள்ளது. சர்வதேச அளவில் சிறப்பான விமான நிலையங்கள் குறித்த பட்டியலில் ஆசிய விமான நிலையங்களே இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. பிரிட்டன் நாட்டின் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சிறந்த விமான நிலையத்திற்கான கருத்துக் கணிப்பை பயணிகளிடம் நடத்தியது. கடந்த 2007-2008ஆம் ஆண்டின் 10 மாத காலத்தில் 8.2 மில்லியன் விமான பயணிகளிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், மொத்தம் 190 விமான நிலையங்களில் வழங்கப்படும் பல்வேறு வசதிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்குள்ள வசதிகள் மற்றும் திறன்மிக்க செயல்பாடு காரணமாக அந்த விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கிற்கு அடுத்தடுத்த இடங்களை சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம், சியோல் நாட்டில் உள்ள இன்சியோன் விமான நிலையம் ஆகியவை பிடித்துள்ளன. கோலாலம்பூர், மலேசியா, மற்றும் ஜப்பான் நாட்டு ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள விமான நிலையம் ஐரோப்பிய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. | |
No comments:
Post a Comment