Saturday, July 26, 2008

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும்: ஒபாமா

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும்: ஒபாமா
ணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்று மெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் பாரக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக பாரக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஒபாமா வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை சந்தித்து பேசிய ஒபாமா நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரான் தனது முறையற்ற அணுசக்தி கொள்கைகளை கைவிட வேண்டும். அணு ஆயுதங்களை ஈரான் அதிகரித்து வருவது ஆபத்தானது.

உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் தனது அணுசக்தி கொள்கையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்த பின்னரும் ஈரான் தனது அணுசக்தி கொள்கைகளை கைவிட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails