Tuesday, July 22, 2008

மணிமோகன் சிங் வெற்றி

 
275-256 என்ற வித்தியாசத்தில் மன்(ணி) மோகன் சிங் வெற்றி
 
 
 
 
 
 
குதிரை பேரம் : நாடாளுமன்றத்தில் கொட்டப்பட்ட பணக்கட்டு !
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்க, சமாஜ்வாதி தரப்பில் கொடுக்கப்பட்டதாக கூறி கட்டுக்கட்டான பணத்தை பா.ஜனதா எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கொட்டியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

தமது அரசு மீது நம்பிக்கை வாக்கு கோரி பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மக்களவையில் நேற்று கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மாலை 4 மணியளவில் திடீரென எதிர்கட்சி வரிசையிலிருந்து எழுந்த பா.ஜனதா எம்.பி.க்கள் 3 பேர், கட்டுக்கட்டான பணம் அடங்கிய பைகளுடன் அவையின் மைய பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அந்த பையை திறந்து அதிலிருந்த பணத்தை கொட்டி, பின்னர் அவற்றை தூக்கி அவையில் காண்பித்தபடியே, நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, தாங்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக சமாஜ்வாதி கட்சி தரப்பிலிருந்து தங்களுக்கு 9 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கூறினர்.

அவர்கள் இவ்வாறு பணக்கட்டுக்களை தூக்கி காண்பித்து கூறியதும் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.அடுத்த நிமிடமே அனைத்து எம்.பி.க்களும் அவையின் மையப்பகுதியை நோக்கி திரண்டனர்.

அவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த 3 எம்.பி.க்களில் அசோக் சிங் அர்கால் மற்றும் பாகன் சிங் ஆகியோர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.மகாவீர் பகோதா என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களாவர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓட்டளிக்காமல் இருப்பதற்காக முதலில் மூன்று கோடி ரூபாய் ( அவைக்கு கொண்டு வந்தது ரூ. 1 கோடி - ஆயிரம் ரூபாய் கட்டுக்கள் நூறு ) தரப்பட்டதாகவும், வாக்கெடுப்புக்குப் பின்னர் மீதமுள்ள தொகை தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.

மேலும் தாங்கள் இந்த பேரத்தை பா.ஜனதா தலைவர் அத்வானியிடம் தெரிவித்ததாகவும், அவரது ஒப்புதலுடனேயே தாங்கள் இந்த பேரத்தை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த பரபரப்பான குற்றச்சாட்டால் ஒட்டு மொத்த தேசமும் அதிர்ந்துபோய் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாக ஒத்திவைத்து விட்டு, இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.


(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails