ஜப்பானில் பூகம்பம் கட்டிடங்கள் ஆடின
டோக்கியோ, ஜூலை 24-
ஜப்பானில் இன்று ஏற்பட்ட பூகம்பத்தால் கட்டிடங்கள் 40 வினாடி தொடர்ந்து ஆடின. இதனால் புல்லட் ரயில் போக்குவரத்து உடனடியாக நிறத்தப்பட்டது. 7 ஆயிரம் வீடுகளில் பவர்கட் ஏற்பட்டது.
வடக்கு ஜப்பானின் ஹான்சூ பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் 40 வினாடி தொடர்ந்து ஆடின. கட்டிடத்தின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மக்கள் பீதியில் கட்டிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். இதில் சிலர் காயம் அடைந்தனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.
பூகம்பத்தை தொடர்ந்து ஹான்சூ பகுதியில் 6 ஆயிரத்து 700 வீடுகளில் பவர்கட் ஏற்பட்டது. இந்தப் பகுதியில் புல்லட் ரயில் போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த பூகம்பத்தால் சுனாமி ஏற்படாது என ஜப்பான் வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடக்கு ஜப்பானின் இவாட் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 7.2 புள்ளிகள் என பதிவானது. இதில் 10 பேர் பலியாயினர். 200 பேர் காயம் அடைந்தனர்.
No comments:
Post a Comment