'ராம சேது பாலமே' இல்லை : உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு | |
| |
'ராம சேது' என்ற ஒரு பாலமே இல்லை என்பதால் அதனை அரசு இடிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள மத்திய அரசு, ராம சேது பாலத்தை ராமர் கடவுளே தனது மந்திர படகால் தகர்த்து விட்டதாகவும், இதற்கு ஆதாரமாக தமிழ் கம்பராமயாணத்தில் இடம்பெற்றுள்ள வரிகளையும் மேற்கோள் காட்டியுள்ளது. மேற்கு கடலோரப் பகுதியிலிருந்து கிழக்கு கடலோரப் பகுதிக்கு செல்லும் கப்பல்கள், இலங்கையை சுற்றிக்கொண்டு செல்லாமல் நேரிடையாக செல்ல ஏதுவாக, பாக்.ஜலசந்தியில் கால்வாயை ஏற்படுத்த மட்டுமே முயற்சிப்பதாக அரசு தனது மனுவில் மேலும் கூறியுள்ளது. கடந்த 2004 ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட சேது சமுத்திர திட்டம், பல்வேறு இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக பிரச்சனைக்குள்ளானது. கப்பல் செல்வதற்கான கால்வாய் தோண்டுவதற்காக ராம் சேது அல்லது ஆதம் பாலம் எனப்படும் ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, இத்திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் இந்து அமைப்புகள், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதற்கு பதிலளித்து மத்திய அரசு முன்னர் தாக்கல் செய்த பதில்( ராமர் என்ற ஒருவர் இருந்ததற்கான வரலாற்று ஆதாராங்களே இல்லை என்ற ) மனு பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதனைத் தொடர்ந்தே மத்திய அரசு இன்று புதிய பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. | |
(மூலம் - வெப்துனியா) |
Wednesday, July 23, 2008
'ராம சேது பாலமே' இல்லை : உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment