அதிரடியாக டிக்ளர் செய்தது இந்தியா | |
. | |
| |
. | |
கொழும்பு, ஜூலை 20: இலங்கை வாரியத்தலைவர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அதிரடியாக டிக்ளர் செய்தது. இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் வரும் 23ந் தேதி தொடங்குகிறது. | |
. | |
இந்நிலையில் இந்திய அணி இலங்கை வாரியத்தலைவர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. வாரியத்தலைவர் அணி 224 ரன்களில் சுருண்டது. இரண்டாம் நாளான நேற்று இந்தியா 8 விக்கெட்இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. டெண்டுல்களர் 69 ரன்களும், தினேஷ் கார்த்திக் 58 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில் இன்று காலை இந்திய அணி அதிரடியாக டிக்ளர் செய்தது. இதனையடுத்து இலங்கை அணி 28 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆடத்தொடங்கிய இலங்கை வாரியத்தலைவர் அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. ஜாகீர்கான் சிறப்பாக பந்து வீசி தரங்கா விக்கெட்டை வீழ்த்தினார். மற்றொரு விக்கெட்டை ஹர்பஜன் சிங் வீழ்த்தினார். நேற்றைய ஆட்டத்தின்போது இந்திய ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. எனினும் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், இந்தியா எப்போதுமே தொடரின் தொடக்கத்தில் மந்தமாக ஆடுவது வழக்கம் என்றும், விரைவில் இது சீராகிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். |
No comments:
Post a Comment