சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் எனது ஆட்டத்தையே நினைவுபடுத்துகிறது என்று கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆட்டக்காரராகத் திகழ்ந்த சர் டொனால்ட் பிராட்மேன் கூறினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின், தனது தனித்த அபார ஆட்டத்தினால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளவர். ஆஸ்ட்ரேலியாவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரராக களமிறங்கிய சச்சின் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் அசர வைத்தவர். 16 வயதில் கிரிக்கெட் விளையாட்டை துவங்கிய சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது முதல்டெஸ்ட் போட்டியில் விளையாடினார். டெஸ்ட் போட்டியில் டொனால்டு ஃப்ராட்மேனுக்கும் பிறகு சச்சின் என்றும், ஒரு நாள் போட்டிகளில் விவியன் ரிச்சர்சனுக்கு பிறகு சச்சின் இருப்பதும் பெருமைபட வேண்டியது என்று வெஸ்டின் என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக விருதுகளை பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். 1997-98ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விரும், 1999ஆம் ஆண்டு சிறந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருதும், பிறகு பத்ம விபூஷண் விருதும் சச்சின் பெற்றுள்ளார். ஒரு நாள் போட்டியில் 16,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள சச்சின், டெஸ்ட் போட்டியில் லாராவுக்கு அடுத்தபடியாக உள்ளார். டெஸ்ட் போட்டியில் 39 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 42 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் சச்சின். 2003ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் சச்சின். 1994, 1996, 1997, 1998, 2000, 2003 ஆண்டுகளில் 1000 ரன்களை குவித்துள்ள ஒரே வீரர் சச்சின். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்ததில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார். தனக்கும், தனது நாட்டிற்கும் இன்றுவரை பெருமை சேர்த்துவரும் சச்சின் டெண்டுக்கரின் பிறந்த நாள் இன்று. வாழ்த்துங்கள் சச்சினை! | |
No comments:
Post a Comment