உயிருக்குப் போராடுகிறார் பின் லேடன் | | சர்வதேச பயங்கரவாதியும், அல் - காய்தா தீவிரவாத இயக்க தலைவனுமான ஒஸாமா பின்லேடன் உயிருக்குப் போராடுவதாக அமெரிக்க உளவு ஏஜென்சியான சிஐஏ தெரிவித்துள்ளது. சிறுநீரக கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லேடன், இன்னும் சில மாதங்களுக்கு உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக சிஐஏ அதிகாரிகள் இருவர் தெரிவித்ததாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் பின்லேடனுக்கு எந்த விதமான மருந்து அளிக்கப்பட்டு வருகிறது என்பது வரை சிஐஏ அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டதாக கூறி, அந்த மருந்துகளின் பெயர்களையும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இந்த இரண்டு சிஐஏ அதிகாரிகளும் பின்லேடன் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருவதாகவும், 6 - 18 மாதங்களுக்கு மேல் லேடன் உயிருடன் இருக்கமாட்டான் என தெரிவித்திருந்ததையும் ' டைம்ஸ் ' பத்திரிகை தனது செய்தியில் தற்போது குறிப்பிட்டுள்ளது. பின்லேடன் சிறுநீரக கோளாறால் அவதியுற்று வரும் தகவலை பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்தான் முதன்முதலாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. | (மூலம் - வெப்துனியா) | |
No comments:
Post a Comment