Tuesday, July 1, 2008

டீசல் இல்லை: 3,000 பேருந்துகள் நிறுத்தம்!-பயணிகள் கடும் அவதி!!

 

டீசல் இல்லை: 3,000 பேருந்துகள் நிறுத்தம்!-பயணிகள் கடும் அவதி!!
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Bus
சென்னை: பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுக் கிடப்பதால் எரிபொருள் இல்லாமல் 3,000 தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டன. அதே போல 20 சதவீத அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இவை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தினசரி இயங்கும் முக்கியப் பேருந்துகளாகும். மேலும் 20 சதவீத தொலைதூர அரசுப் பேருந்துகளும் அறிவிப்பின்றி சம்பந்தப்பட்ட கோட்ட பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

எண்ணெய் சப்ளை குறைவாக இருப்பதாகக் கூறி, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பெட்ரோல்- டீஸல் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கு வழங்கப்பட்டு வந்த எல்பிஜி வாயுவும் சுத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தவும், எப்படியாவது பெட்ரோல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளவுமே இப்படி ஒரு தற்காலிக பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு வந்து சேரவேண்டிய எண்ணெய்க் கப்பல் வராத்தால் பெடரோல் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் டீஸல் இல்லாத காரணத்தால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் 3000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், பல ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

இனி டீஸல் கிடைத்தால்தான் தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியும் என பேருந்துகளின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நிலைமை சரியாகும் வரை பயணிகள் டிக்கெட் ரிசர்வேஷனையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கோயம்பேட்டில் தனியார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.

அரசுப் பேருந்துகளும் கணிசமான அளவுக்கு சர்வீஸ்களைக் குறைத்துள்ளன. ஆனால் இதுகுறித்து வெளிப்படையான அளிவிப்பு ஏதும் இல்லை. ஆனால் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் 20 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு சுமை தூக்குவோர் சங்கம் கூறியுள்ளது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails