Wednesday, July 2, 2008

புலிகள் தாக்குதலில் உயிர் தப்பினார் ராஜ பக்சே

புலிகள் தாக்குதலில் உயிர் தப்பினார் ராஜ பக்சே
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பயணம் செய்யவிருந்த ஹெலிகாப்டர் மீது விடுதலைப் புலிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

அம்பாறை அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் சென்றிருந்தார்.

பாலத்தினை திறந்து வைத்து ராஜபக்சே உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பிற்பகல் 1 மணியளவில் பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து ராஜபக்சேவை அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது. அந்த ஹெலிகாப்டர் கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதி மீது பறந்தபோது விடுதலைப் புலிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

உடனடியாக தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் உல்லைப் பாலத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அது சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டரில் ராஜ பக்சே பயணம் செய்திருக்கலாம் என்று கருதி விடுதலைப் புலிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனிடையே இத்தாக்குதலில் இலங்கை விமானப் படையினர் 3 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
(மூலம் - வெப்துனியா)

 

http://in.tamil.yahoo.com/News/International/0807/02/1080702025_1.htm

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails