பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும்?
முட்டையில் செய்யப்படும் ஆப்பாயிலை திருப்பிப்போட்டால் புல்பாயிலோ அல்லது ஆம்லேட்டோ கிடைக்கும். பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும் என்ற கேள்வியே சற்று நூதனமானதாக இருக்கேன்னு நினைக்கிறீங்களா? கடுமையான வெயிலின் தாக்கத்துல சிலர் பேசுறதே நமக்கு புரியாது. அவங்களுக்கே புரியுமா என்பது சற்று சந்தேகம் தான். ஆனால் முழுக்க முழுக்க குழம்பியவர்கள் பேசுவது புலம்பலாக இல்லாமல் குழம்பலாகத்தானே இருக்கும். அப்படி குட்டையை குழப்பியவர்கள் கூறியதை கூறுகிறேன் சற்று கேளுங்கள்.
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று பரிணாமக் கொள்கையாளர்கள் உளறிக்கொண்டு பலகாலமாக சுற்றித்திரிகிறார்கள்.ஆனால் இவர்களுக்கும் முன்பாகவே உள்ள அருமை இரத்தத்தின் இரத்தங்கள் அட போங்கடா புண்ணாக்குப் பயலுவலா, மனிதனிடம் இருந்துதான் குரங்கு வந்தது தெரியுமா என்று எழுதிவைத்திருக்கிறார்கள். எல்லாம் அந்த இல்லா அல்லாவோட கைங்கரியம்தான்றேன். ஆனா செய்தி என்ன தெரியுமோ? இது அந்த புத்தகத்தை அதான் குரானை வாசிக்கிறவகளுக்கே தெரியுமா என்பதை அவர்களிடம் தான் கேட்கனும். இவுக வாசிக்க மட்டும்தானே செய்வாக, அதின் அர்த்தம்தான் அவர்களுக்கு தெரியாதே! தெரிஞ்சா எல்லாம் புரிஞ்சிடுமே!அட்றா சக்கை....
இதனால் சகலமானவர்களுக்கும் இல்லா அல்லா தெரிவித்துக் கொள்வதை உங்கள் முன் படைக்க விரும்புகிறேன். நம்முடைய இன்றைய சிந்தனையின் ஆதாரமாக குஆனிலிருந்து ஸூரா2:65 மற்றும் ஸூரா7:163- 166 ஆகிய பகுதிகளை எடுத்துக் கொள்கிறேன்.
யாராவது வாசிங்க ப்ளீஸ்!
அட சற்று சத்தமாகத்தான் வாசிங்களேன்!
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி 'சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம (ஸூரா2:65 )
(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்¢ ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம். (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், 'அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்¢ அதற்கு (அந்த நல்லடியார்கள்): 'எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்." அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்¢ வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, 'நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (ஸூரா7:163- 166)
இதை வாசிக்கும் சகோதரர்களே இங்கே குரங்குகளாகிவிடுங்கள் என்பது ஒரு உதாரணமாகக் கூறப்படவில்லை என்பதை சற்று கவனியுங்கள். ஆகவே பரிணாமக் கொள்கை பேசும் முட்டாள்களுக்கு நாங்களும் களத்துல இருக்கோம்ல என்று சொல்வதற்கு ஆட்கள் இருக்காங்கப்பா. இவங்களையும் அவங்கள விட நல்ல உயந்த இடத்தில உங்கள் லிஸ்ட்ல வச்சுக்கோங்க. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்பவர்கள் கூட மனிதன் சிறப்பானவன் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனா இவங்க பார்வையில குரங்குகள்தான் சிறப்பானது போல.யாருக்கு தெரியும்? அட இதுவும் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.
குரான் என்பது கட்டுக்கதைகள் நிறைந்த புத்தகம் மட்டுமல்ல, மக்களை எந்தளவுக்கு முட்டாளாக்க முடியுமோ அந்தளவுக்கு முட்டாள்களாக்கும் புத்தகமும் கூட. அதனாலதான் நம்ம முன்னோர்கள் இவர்களைப் பற்றி பழமொழியில கூட கரெக்டா சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.(சங்கீதம் 14:1 )
No comments:
Post a Comment