இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு-ஜக்ஸ்ட்கன்சல்ட் ஆன்லைன் ஆய்வு முடிவுகள் |
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்த ஆய்வை ஜக்ஸ்ட்கன்சல்ட் நடத்தியுள்ளது.
இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரின் பயன்பாட்டுத் தன்மை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
தற்போது 2008ம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜக்ஸ்டகன்சல்ட் இந்தியா ஆன்லைன்-2008 ஆய்வின் முக்கிய அம்சங்கள்
- கடந்த ஆண்டு இந்திய இன்டர்நெட் பயன்பாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்துள்ளது.
- இந்தியாவில் கடந்த ஆண்டு இணைய தளங்களை பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 4.9 கோடியாகும். இதில் 4 கோடி பேர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 90 லட்சம் பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
- கடந்த ஆண்டில் நகர்ப்புற இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
- இவர்களில் 3.5 கோடி பேர் மிக ரெகுலராக இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 3 கோடி பேர் நகர்ப்புறங்களையும், 50 லட்சம் பேர் ஊரகப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
- நகர்ப்புறங்களில் ரெகுலராக இண்டர்நெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 19 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
- 2.5 கோடி பேர் தினமும் இண்டர்நெட்டை பயன்படுத்துவோர் ஆவர்.
'ரெகுலர்' பயன்பாட்டாளர்கள் என்பது, குறைந்தது மாதம் ஒரு முறையாவது இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஆவர்.
இந்தியாவில், அனைத்துப் வயதைச் சேர்ந்தவர்களிடையேயும், இன்டர்நெட் பயன்பாடு நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றாலும் 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் 77 சதவீதம் நெட்டை பயன்படுத்துகின்றனர்.
மொத்த இணையதள பயன்பாட்டாளர்களில் 70 சதவீதம் பேர் ஏ, பி மற்றும் சி நகரங்களைச் சேர்ந்தவர்கள். 51 சதவீதம் பேர் மாதச் சம்பளம் வாங்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். 63 சதவீதம் பேர் சொந்த வாகனம் வைத்திருப்போர் ஆவர்.
இணையதளங்களைப் பயன்படுத்துவோரில் 28 சதவீதம் பேர்தான் ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் தங்களது தாய் மொழி தொடர்பான இணையதளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டர்நெட் பயன்படுத்துவோரின் பின்னணி

வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருப்போர் | இன்டர்நெட் பயன்படுத்துவோர் |
கலர் டிவி வைத்திருப்போர | 90 % |
செல்போன் | 87% |
வங்கிக் கணக்கு | 84% |
கம்ப்யூட்டர் - லேப்டாப் | 72% |
பிரிட்ஜ | 68% |
லைப் இன்சூரன்ஸ | 53% |
2 வீலர | 46% |
கிரெடிட் கார்டு | 31% |
ஏசி | 19% |
4 வீலர் | 17% |
பங்கு முதலீடு வைத்திருப்போர் | 11% |
தினசரி வாழ்க்கையை ஆக்கிரமிக்கும் இன்டர்நெட்:
இண்டர்நெட் ஒருவரின் தினசரி வாழ்க்கையில் பெரும் பங்கு வகிப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வீடுகளில் பிரவுசிங் செய்வதையே 41 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.
ரெகுலர் பயன்பாட்டாளர்கள் 10 பேரில் 9 பேர் வீட்டிலும் அலுவலகத்திலும் தான் பிரவுஸ் செய்கின்றனர்.
- இவர்களில் பலர் வீட்டில் குறைந்தது 2 மணி நேரமாவது பிரவுசிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
- வார இறுதி நாட்களில் குறைந்தது 2 மணி நேரமாவது பிரவுசிங் செய்வோரின் எண்ணிக்கை 36 சதவீதமாகும்.
- 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் டிவி பார்ப்போரின் எண்ணிக்கை 14 சதவீதம்.
- 2 மணி அல்லது அதற்கு மேல் செய்தித்தாள்களைப் படிப்போரின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம்தான்.
- 2 மணி அல்லது அதற்கு மேலும் ரேடியோ கேட்போரின் எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே.
- சேட்டிங், பிளாக் உள்ளிட்ட சமூக மீடியா தளங்கள் மூலம் பிறருடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோரின் எண்ணிக்கை 81 சதவீதமாகும்.
இமெயில் அனுப்பத்தான் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர்.
டாப் 10 பயன்பாட்டு பட்டியல் | இன்டர்நெட் பயன்பாடு |
இ மெயில் | 91% |
வேலை தேட | 72% |
மெசேஜ், சாட் செய்ய | 70% |
செய்தி பார்க்க | 63% |
விளையாட்டு செய்தி அறிய | 57% |
படம், இசை டவுன்லோட் செய்ய | 54% |
கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க | 50% |
டேட்டிங், நண்பர்களைப் பிடிக்க | 50% |
வரன் தேட | 49% |
தகவல் தேட (சர்ச் என்ஜின்) | 49% |
சராசரியாக 15 வகையான செயல்பாட்டுக்கு இன்டர்நெட்டை பயன்பாட்டாளர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதில் டாப் 10ல் 7 செயல்பாடுகள், அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பானவையாக உள்ளன.
தாய் மொழி பயன்பாடு அதிகரிப்பு:
தாய் மொழியிலான இணையத் தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 12 சதவீதமாக இருந்தது. இது தற்போது 34 சதவீதமாக எகிறியுள்ளது.
28 சதவீதம் பேர்தான் ஆங்கில தளங்களை அதிகம் பார்க்கின்றனர். அதேசமயம் 34 சதவீதம் பேர் மட்டுமே பிராந்திய மொழிகளைப் பார்ப்பதற்குக் காரணம், பிராந்திய மொழிகளில் போதிய அளவிலான இணைய தளங்கள் இல்லாததே.
ஆன்லைன் ஷாப்பிங்:
- ரெகுலராக இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குகின்றனர் அல்லது வாங்க இருக்கும் பொருளை ஆன்லைனில் தேடுகின்றனர்.
- இதில் 23 சதவீதம் பேர் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கியுள்ளனர். ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.
- ஆன்லைனில் பொருட்கள் வாங்கியவர்களில் 92 சதவீதம் பேர் (இது இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 23 சதவீதம் ஆவர்) பயணம் தொடர்பான பொருட்களை (டிக்கெட் உள்ளிட்டவை) வாங்கியுள்ளனர். பயணம் தொடர்பில்லாத பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கியோரின் 51 சதவீதத்தினர் ஆவர்.
- கடந்த 6 மாதங்களில் 80 சதவீதம் பேர் ரயில் டிக்கெட்டுகளை வாங்க ஆன்லைனைப் பயன்படுத்தியுள்ளனர். 52 சதவீதம் பேர் விமான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
- இவை தவிர புத்தகங்கள், உடைகள், சிடி, டிவிடி ஆகியவற்றையும் பெருமளவில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கியுள்ளனர். இன்டர்நெட்டில் அதிக அளவில் தேடப்பட்ட பொருட்களாக கம்ப்யூட்டர்களும், மொபைல் போன்களும் உள்ளன.
தேடல் - முன்னணியில் கூகுள்:
இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் முன்னணி தளமாக கூகுள் உள்ளது.
இணையதளம | நினைத்தவர்கள் | அதிகமாக பயன்படுத்தியவர்கள் |
கூகுள் | 36.6% | 28.4% |
யாஹூ | 31.5% | 27.6% |
ரீடிப் | 7.4% | 8.6% |
ஆர்குட | 5.6% | 8.1% |
ஜிெமயில | 5.5% | 8.6% |
இந்தியாடைம்ஸ | 1.7% | 1.2% |
ஹாட்மெயில் | 1.1% | 1.0% |
மணிகண்ட்ரோல் | 0.8% | 0.8% |
நெளக்ரி | 0.7% | 0.4% |
சிஃபி | 0.6% | 0.7% |
குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படும் இணையத் தளங்கள்.
நோக்கம் | இணையதளம் | பயன்பாட்டு விகிதம் |
இ மெயில | யாஹூ | 51% |
மெசேஸிங் | யாஹூ | 53% |
வேலை தேடல | நெளக்ரி | 42% |
ஆன்லைன் செய்தி | யாஹூ | 16% |
தகவல் தேடல் (ஆங்கிலம்) | கூகுள | 81% |
தகவல் தேடல் (பிராந்தியமொழி) | கூகுள் | 65% |
ஆன்லைன் டிராவல | யாத்ரா | 18% |
கேம்ஸ | ஜபக் | 32% |
ஷாப்பிங் (பயணம் அல்லாதது) | ஈபே | 33% |
ரியல் எஸ்டேட் | கூகுள் | 23% |
நிதி செய்திகள் | மணிகண்ட்ரோல | 18% |
ஷேர் டிரேடிங் | ஐசிஐசிஐ டைரக்ட் | 31% |
நெட் டெலிபோன் | யாஹூ | 25% |
மேட்ரிமோனி | பாரத் மேட்ரிமோனி | 36% |
டேட்டிங், நண்பர்கள் | ஆர்குட | 54% |
பட பகிர்வு | ஆர்குட | 38% |
சோஷியல் நெட்ஒர்க்கிங | ஆர்குட | 66% |
புரபஷனல் நெட்ஒர்க்கிங | ஆர்குட | 44% |
வீடியோ பகிர்வு | யூடியூப | 43% |
விளையாட்ட | கிரிக்இன்ஃபோ | 19% |
ஜோதிடம் | யாஹு | 25% |
சினிமா | யாஹூ | 14% |
இசை | ராகா | 17% |
ஆன்லைன் கல்வி, கற்றல் | கூகுள் | 32% |
சிடி வாடகை, வாங்குவது | ரீடிப் | 19% |
மொபைல் கன்டென்ட் | யாஹூ | 12% |
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட முறை:
- கடந்த மார்ச் மாதம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
- 40 நகரங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 160 கிராமங்களைச் சேர்ந்த 4000 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
- மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆயிரம் பேரிடம் ஆன்லைன் மூலமும் கருத்து அறியப்பட்டது.
- கூகுள் சர்ச் விளம்பரங்கள் மற்றும் ஜஸ்க்ட்கன்சல்ட் அமைப்பின் இணையதளம் மூலம் (http://www.getcounted.net/) ஆன்லைன் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
- மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில், நகர்ப்புற- கிராமப்புற மக்களின் எண்ணிக்கையை கருத்தில் வைத்து, மிகவும் முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment