பின்லேடன் மீண்டும் மிரட்டல்
வாஷிங்டன், மே.17-
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இஸ்ரேலின் 60-வது ஆண்டு விழாவை யொட்டி ஒரு ஆடியோ டேப்பை வெளியிட்டு இருக்கிறார். இணைய தளத்தில் இடம் பெற்று உள்ள இந்த ஆடியோ டேப்பில் அவர் பேசி இருப்பதாவது:-
இஸ்ரேலியர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் எதிராக நாங்கள் தொடர்ந்து யுத்தம் செய்வோம். உலகில் உண்மையான முஸ்லிம் ஒருவர் இருக்கும் வரை பாலஸ்தீனத்தில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக் கொடுக்கமாட்டோம். இஸ்ரேல் 60-வது ஆண்டு விழா கொண்டாடுவதன் மூலம் அந்ந நாடு 60 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்தது இல்லை என்பதும், பாலஸ்தீனியர்களிடம் இருந்து பலவந்தமாக பூமியை பறித்து தான் புதிய நாடு உருவாக்கப்பட்டது என்பதும் தெளிவாகிறது. இஸ்ரேலியர்களை வன்முறைக்கு பலியானவர்கள் என்பதுபோலவும், பாலஸ்தீனியர்களை பயங்கரவாதிகள் போலவும் மேற்கத்திய பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. அமைதி முயற்சிகள் கடந்த 60 ஆண்டுகளாக நடக்கின்றன. ஆனால் பாலஸ்தீன நாட்டை உருவாக்க முடியவில்லை.
இவ்வாறு அந்த ஆடியோ டேப்பில் பின்லேடன் கூறி உள்ளார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=413207&disdate=5/17/2008
No comments:
Post a Comment