Sunday, May 18, 2008

சீனாவில் மீண்டும் பூமி அதிர்ச்சி: பீதியில் மக்கள் ஓட்டம்

சீனாவில் மீண்டும் பூமி அதிர்ச்சி: பீதியில் மக்கள் ஓட்டம்

பிஜீங், மே. 18-

சீன பூகம்பத்தில் இது வரை 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளில் மீட்பு பணி கள் இன்னும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பூகம்பம் நடந்த சிச்சுவான் பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. மக்கள் அலறியபடி ஓடி னார்கள். இது ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

பெரிய பூகம்பம் ஏற் பட்டதற்கு பிறகு இதுவரை 900 தடவைக்கு மேல் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில் 5 ரிக்டர் ஸ்கேல் அள வுக்கு மேலாக 20 தடவை ஏற்பட்டுள்ளது.

பூகம்பம் நடந்த 5, 6 நாட்கள் முடிந்து விட்ட போதிலும் இன்னும் இடி பாடுக்குள் சிலர் உயிரோடு இருக்கின்றனர். அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று 5 நாட்களாக புதைந்து கிடந்த 8வயது சிறு வனை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். கடந்த 2 நாட்களில் 6 பேர் இதே போல உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர்.

இதற்கிடையே பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் அணை ஒன்று உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்த 50 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள் ளனர்.

இந்த அணை பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போது மழை பெய்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி இருக்கிறது. எனவே அணை உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails