Friday, May 30, 2008

சிறுவர்களை மனித குண்டுகளாக மாற்றும் தலிபான்கள்

சிறுவர்களை மனித குண்டுகளாக மாற்றும் தலிபான்கள்
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

இஸ்லாமாபாத்: சிறுவர்களை வைத்து மனித வெடிகுண்டுகளை உருவாக்குவதாக தலிபான் தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தலிபான்களின் மனித வெடிகுண்டுப் பிரிவிலிருந்து தப்பி வந்த 14 வயது பாகிஸ்தான் சிறுவனான ஷகிருல்லா இந்த பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளான்.

இதுகுறித்து அவன் கூறுகையில், நான் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மதரசாவில் பயின்று வந்தேன். அங்கிருந்த மதகுருமார்கள் என்னிடம் தலிபான் அமைப்பின் தற்கொலைப் படையில் சேர்த்து விட்டனர். அங்கு எனக்கு வெடிகுண்டுத் தாக்குதல் குறித்து விளக்கப்பட்டது.

இதனால் நான் பயந்தேன். ஆனால் மதகுருமார்கள் எனக்கு ஆறுதல் கூறி, குண்டு மட்டுமே வெடிக்கும், நீ சாக மாட்டாய் என கூறினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானின் புத்தாண்டின்போது, வெடிகுண்டுகள் நிரப்பிய காருடன் என்னை அனுப்பி வைத்தனர்.

நான் காரில் போய்க் கொண்டிருந்தபோது வறண்டு கிடந்த ஆற்றுப் படுகையில் எனது கார் சிக்கிக் கொண்டது. அப்போது அங்கு வந்த ஆப்கானிஸ்தான் உளவுப் படையினர் என்னைப் பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளான் ஷகீருல்லா.

ஷகீருல்லா, தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிகம் நிறைந்த பாகிஸ்தானின், வடக்கு வசிரிஸ்தானில் உள்ள பர்வான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் ஆவான்.

நான்கு மாதங்களுக்கு முன்புதான் அங்குள்ள மதரசாவில் சேர்ந்தான் ஷகீருல்லா. அதன் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு அவன் அனுப்பப்பட்டான். எதிரிகளுடன் மோத வேண்டும் என்ற உத்தரவின் பேரில் அவன் அனுப்பி வைக்கப்பட்டான்.

அப்போது அவனிடம் மத குருமார்கள், உன்னால் வெளிநாட்டு தீவிரவாதிகள்தான் சாவார்கள். உனக்கு ஒன்றும் நேராது. நீ கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே, தலிபான் தீவிரவாதிகள் ஷகீருல்லாவைப் போல ஏராளமான சிறுவர்களை தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக மாற்றி வருவதாக ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயின் செய்தித் தொடர்பாளர் ஹூமாயூன் ஹமீத்ஸாதா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகள் சிறுவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை தற்கொலைப் படையில் சேர்த்து பல அப்பாவிகளின் உயிர்களைப் பறித்து வருகின்றனர் என்றார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails