Friday, May 23, 2008

சென்னை - Chennai-Madras -ஒரு பயோ கிராபிகல்ஸ்

 நகர வரலாறு:
Parrys Corner in 1890 AD முன்னூறு வருட சரித்திரம். கடலோர கிராமங்களுக்கிடையில் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இறங்கி கி.பி. 1639ல் விஜயநகரின் கடைசி அரசர் சந்திரகிரி அளித்த நிலத்தில் மதராஸ்பட்டினத்தை ஸ்தாபித்தனர். 1644ல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நிறுவிய பின்னர் அதைச் சுற்றிலும் திட்டமில்லாமலே மெட்ராஸ் வளர ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்களின் பிடியில் முழுமையாக தென்னிந்தியா வந்த பின் மெட்ராஸ் அவர்களது நிர்வாக மற்றும் வியாபார தலைநகரானது.

தொடர்ந்து மிக வேகமாக வளர்ந்து இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. மெட்ராஸ் என்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர் 1996ல் சென்னை என்று அதிகார பூர்வ பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகர் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த சென்னப்ப நாயக்கரின் நினைவாக இப்பெயர் அமைந்தது.

நகர வழக்கங்கள்:
குளிர்காலத்தில் கூட 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவதில்லை. கடல் காற்றின் ஈரப்பதத்தால் கசகசப்பு இருந்தாலும் மா‍லை 4 மணிக்கு ‍மேல் கடலில் இருந்து நிலத்திற்கு வரும் காற்று இரவின் வெம்மையை வெகுவாக குறைக்கிறது. வருடம் முழுவதற்கும் வேனிர்கால உடைகளே போதுமானவை.

நாட்டின் பெரிய மெட்ரோக்களில் ஒன்று, ஆனாலும் கட்டுப்பெட்டித்தனமான நகரம் என்றிருந்த பெயர் தற்போது மாறி வருகிறது. இங்கு பேசப்படும் தமிழ் மற்ற இடங்களில் வாழும் தமிழர்களுக்கே புரியாத அளவு மொழி மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் இந்த பேச்சு வழக்கு சமூகத்தின் அடிமட்ட மக்களிடம் மட்டுமே பரவலாக உள்ளது.

நகரின் அமைப்பு:
நகரம் வடக்கு தெற்காக முதலில் விரிவடைந்தது, தற்போது மேற்கில் விரிவடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அகலமான சாலைகளைக் கொண்ட நகரமாக இருந்தாலும் நகரின் வளர்ச்சியினால் மிகுந்த நெரிசலும் புகை மாசும் நிறைந்த நகரமாக இருக்கிறது.

50களில் முக்கிய சாலையான அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) கட்டப்பட்ட 14மாடி கட்டிடமே இன்றும் சென்னையின் அடையாளம். தற்போது தான் அதை விட அதிக மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டபட்டு வருகின்றன.


முக்கிய இடங்கள்:
மெரினா கடற்கரை:
உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை, தற்போது அளவுக்கதிகமான கூட்டத்தாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் 5 கி.மீ. நீளத்திற்கு மிக லேசான வளைவுடன் இருக்கும் கடற்கரையின் அழகு அவற்றையும் மீறி வசீகரிக்கிறது. இதன் வடகோடியில் அறிஞர் அண்ணாவின் சமாதி உள்ளது.

மாமல்லபுரம் (மகாபலிபுரம்):
சென்னையிலிருந்து தெற்கு கடற்கரையோர சாலையில் சுமார் 60கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல்லவ காலத்தில் செய்யப்பட்ட அற்புதமான பழங்காலச் சிலைகள் இந்த சிற்றூர் முழுதும் காணலாம். ஊர் முழுதும் பல்வேறு சிலை செய்யும் ஸ்தாபனங்கள் முளைத்துள்ளன. சிறப்பான சிற்பக் கலைஞர்கள் நிறைந்த ஊர். மாமல்லபுரம் செல்லும் சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் (Theme Parks) திறக்கப்பட்டுள்ளன.

வண்டலூர் மிருகக்காட்சி சா‍லை:
நகரின் மையத்தில் முன்பு அமைந்திருந்த மிருகக்காட்சி சாலை தற்போது நகரின் வெளியே பரந்த இடத்தில் மிருகங்கள் இயற்கையாக உலவும் வன்னம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் கண்டு களிக்க ஏற்ற இடம்.

வள்ளுவர் கோட்டம்:
திருவள்ளுவரின் பெயரால் தமிழக அரசு அமைந்த கூடம். தேர் போன்ற வெளிப்புற அமைப்பு காணத்தக்கவை, உள்ளே திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails