நைஜீரியாவில்
எண்ணை குழாய் வெடித்து 100 பேர் பலி
லாகோஸ், மே.17-
ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எண்ணைக்குழாய் வெடித்ததில் 100 பேர் பலியானார்கள்.
8-வது இடத்தில்
நைஜீரியாவில் பெட்ரோல் அதிக அளவில் கிடைத்து வருகிறது. உலகிலேயே எண்ணை ஏற்றுமதி நாடுகளில் 8-வது நாடாக நைஜீரியா உள்ளது. இதன் பொருளாதார தலைநகராக லாகோஸ் விளங்குகிறது. இங்கு இருந்து உலகின் பல பகுதிகளுக்கும் கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணை ஏற்று மதிக்காக லாகோஸ் நகரம் முழுவதும் எண்ணை குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
லாகோஸ்சின் புறநகர் பகுதியில் அலிமோஷோ மாவட்டத்தில் இஜேகன் என்ற கிராமத்தில் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் ரோடு என்ஜின் அந்த வழியாக சென்றது. அப்போது தரையில் பதிக்கப்பட்ட எண்ணைக் குழாய்கள் மீது அந்த ரோடு என்ஜின் சென்றதால் குழாய்கள் நசுங்கி வெடித்தன.
100 பேர் பலி
எண்ணைக் குழாய்கள் திடீர் என்று வெடித்ததால் தீ பிடித்தது. அநத தீ, 500-க்கும் மேற்பட்ட வீடுகளையும், பள்ளிக்கூடங்களையும் சூழ்ந்தது. இதனால் அந்த நகரமே தீ பிடித்து எரிவது போல இருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி செத்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஏறத்தாழ 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
1998-ம் ஆண்டு நைஜீரியாவில் எண்ணை குழாய் வெடித்ததில் 1500 பேர் பலியானார்கள். 2006-ம் ஆண்டு இதே லாகோஸ் நகரில் எண்ணைக் குழாயில் தீப்பிடித்ததில் 250பேர் பலியானார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எண்ணைக்குழாயை உடைத்து பெட்ரோல் திருடியதில் குழாய் வெடித்தது. இதில் 45 பேர் பலியானார்கள்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=413210&disdate=5/17/2008
No comments:
Post a Comment