மீண்டும் நக்சலைட் ஆக மாறுவேன் - தென்காசி எம்பி ஆவேசம் |
தென்காசி: நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை, ஏழைகள் படும் அவதியைப் பார்க்கும்போது மீண்டும் நக்சல்பாரி இயக்கத்திற்கே சென்று விடலாமோ என்று தோன்றுகிறது என்று தென்காசி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ அப்பாதுரை ஆவேசமாக கூறியுள்ளார்.
தென்காசியை அடுத்த மேலகரத்தில் சுமார் 50 ஆண்டுகால கோரிக்கையான மயான சாலை அமைக்க நிதி ஓதுக்கீடு செய்தமைக்காக அப்பாத்துரை எம்பிக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவில் அப்பாத்துரை பேசுகையில், நாடு இவ்வளவு தூரம் முன்னேறிய நிலையிலும் ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது.
மக்களின் மருத்துவ தேவை, குடிநீர் தேவை, போன்றவற்றை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தால் நிதி இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் கோடிக்கனக்கான பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு மட்டும் நிதிபாற்றாக்குறை வந்து விடுகிறது. அரசு தானிய கிட்டாங்கியில் போதுமான உணவு இருப்பு இருந்தும் நாட்டில் 34 கோடி பேர் ஒருவேளை உணவு பற்றாக்குறையில் உள்ளனர்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது செயல்பட்ட நக்சல்பாரி இயக்கத்திற்கே திரும்பி சென்று விடவேண்டும் என்று எண்ணுகிறேன் என்றார்.

No comments:
Post a Comment