Friday, May 23, 2008

மிட்டல் வசமான உலகிலேயே விலையுயர்ந்த மாளிகை

மிட்டல் வசமான உலகிலேயே விலையுயர்ந்த மாளிகை
  
    

Mittals Mansion
லண்டன்: லண்டனில் உள்ள மிகப் பெரிய மாளிகையை 117 மில்லியன் பவுன்டுகளுக்கு இந்திய கோடீஸ்வரர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டலின் மகன் ஆதித்யா மிட்டல் வாங்கியுள்ளார்.

உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்படும் கட்டடம் என்ற பெருமை இதன் மூலம் இந்த மாளிகைக்குக் கிடைத்துள்ளது.

பாலஸ்கிரீன் பகுதியில் இந்தி பிரமாண்டமான மாளிகை உள்ளது. இதற்கு அருகில் உள்ள கென்சிங்டன் பாலஸ் கார்டன்ஸ் பகுதியில்தான் ஆதித்யா மிட்டலின் தந்தை லக்ஷ்மி மிட்டலின் பிரமாண்ட வீடு உள்ளது.

32 வயதாகும் ஆதித்யா மிட்டல், தனது தந்தையின் வீட்டுக்கு அருகிலேயே மிகப் பெரிய வீடாக பாரத்து வந்தபோதுதான் இந்த பாலஸ் க்ரீன்ஸ் வீடு கிடைத்தது. கென்சிங்டன் பகுதியில் தற்போது லக்ஷ்மி மிட்டல் வசித்து வரும் வீட்டை 2004ம் ஆண்டு பார்முலா ஒன் அமைப்பின் தலைவர் பெர்னி எக்லஸ்டோனிடமிருந்து 57 மில்லியன் பவுன்டுகளுக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்சிங்டன் பாலஸ் கிரவுண்ட்ஸ் பகுதியில் மிக மிகப் பெரிய பில்லியனர்கள் பலர் வசித்து வருகின்றனர். உலகின் மிக அதிக விலை கொண்ட வீடுகள் நிறைந்த பகுதியாகும் இது.

இப்பகுதியில் ஒரு சதுர அடி 8000 பவுன்டுகளுக்கு விலை போகிறது. இதற்கு முன்பு 80 மில்லியன் பவுன்டுகளுக்கு லண்டனில் ஒரு வீடு விலை போனது. அதை தற்போது ஆதித்யா மிட்டல் வாங்கியுள்ள வீடு முறியடித்துள்ளது.

ஆதித்யா மிட்டல் விலை பேசியுள்ள வீடு கோட்ஸ்மேன் என்பவருக்குச் சொந்தமானதாகும். இந்த வீட்டுக்கு அருகில்தான் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது.

வீட்டை விற்கும் கோட்ஸ்மேனும் சாதாரண ஆள் இல்லை. அவருக்கு 460 மில்லியன் பவுன்ட் சொத்து உள்ளது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails