பாகிஸ்தான்-சீனா எல்லையில்
பின்லேடன் இமயமலை அடிவாரத்தில் பதுங்கி இருக்கிறார்
அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்தது
இஸ்லாமாபாத், மே.29-
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் சீனா எல்லை அருகே இமயமலை அடிவாரத்தில் பதுங்கி இருக்கிறார் என்று அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ கண்டுபிடித்து உள்ளது.
எங்கு இருக்கிறார்
அல்கொய்தா அமைப்பின் தலைவரான பின்லேடன் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியபோது ஆப்கானிஸ்தான் தங்கி இருந்தார். 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடந்த தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து அங்கு இருந்து தப்பி ஓடிய அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியானது.
இணையதளத்தில் வெளியான அவருடைய அறிக்கைகளும், போட்டோக்களும் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. அவர் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிஇன மக்களுடன் வசிக்கிறார் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியிலும் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இமயமலை அடிவாரத்தில்
இந்த நிலையில் அவர் இமயமலை அடிவாரத்தில் காரகோரம் பகுதியில் சீனாவின் எல்லை அருகே அவர் பதுங்கிஇருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ கண்டுபிடித்து உள்ளது.
உலகின் கூரை என்று அழைக்கப்படும் அளவுக்கு உலகிலேயே உயரமான பகுதியில் தான் பின்லேடன் பதுங்கிஇருக்கிறார். பாகிஸ்தானின் மேற்கே ஆப்கானிஸ்தானின் நுரேஸ்தான் மாநிலமும், இந்த பகுதியின் வடக்கே சீனாவும் உள்ளது. இந்த தகவலை அல்அரேபியா என்ற அரபு சேனல் அறிவித்து உள்ளது.
அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஆலோசனை
கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் உள்ள ராணுவதளத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில் பின்லேடனை பிடிப்பதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஈராக் நாட்டுக்கான அமெரிக்க தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயியஸ் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ஆனி பாட்டர்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=415614&disdate=5/29/2008
No comments:
Post a Comment