Monday, May 26, 2008

தமிழ் ஈழ கோரிக்கையை பிரபாகரன் கைவிடவேண்டும்-அமெரிக்கா அறிவுரை

தமிழ் ஈழ கோரிக்கையை பிரபாகரன் கைவிடவேண்டும்-அமெரிக்கா அறிவுரை

கொழும்பு: தமிழ் ஈழ கோரிக்கையை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாரகரன் கைவிடவேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறுகையில், தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டு, ஒருங்கிணைந்த இலங்கை என்ற கொள்கையை பிரபாகரன் முன்வந்து ஏற்றுக்கொள்வதுதான் பயனுள்ளதாக அமையும் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார். இதுகுறித்து தமிழ் மக்களிடம், தான், கருத்து கேட்டதாகவும், அவர்களில் 95 சதவீதம்பேர் ஒருங்கிணைந்த இலங்கை கொள்கையையே விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும், தனி ஈழத்தை பிரபாகரன் மட்டுமே, விரும்புவதாகவும் அவர்கள் கூறியதாக தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதாகவும், வெளிநாடு சுற்றுலாபயணிகள், அவர்களது ஒற்றுமையைப் பார்த்து வியப்படைவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையைப் பொறுத்தவரை, ஒருங்கிணைந்த இலங்கையின்கீழ், அதிகாரப் பகிர்வு என்பது தான் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=121#121

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails