ஜெய்ப்பூரில் 66 பேர் பலியான
குண்டு வெடிப்பு வழக்கில் மசூதி இமாம் கைது
பரத்பூர், மே.27-
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் சில நாட்களுக்கு முன் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. அதில் 66 பேர் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, மசூதியின் இமாமாக இருக்கும் மொகமது இலியாஸ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஜெய்ப்பூருக்கு கொண்டு வந்துள்ளனர். இமாம் இலியாசை ரகசிய இடத்தில் வைத்து சிறப்பு விசாரணை படையை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இமாமிடம் இருந்து ஒரு கம்ப்ïட்டர், செல்போன் மற்றும் சில டைரிகள் கைப்பற்றப்பட்டன.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=415172&disdate=5/27/2008



No comments:
Post a Comment