ஏ.கே.47 துப்பாக்கியுடன் போஸ்- பிரதீபாவுக்கு கண்டனம் |
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ராணுவ தளம் ஒன்றுக்கு சென்ற பிரதீபா, ஏ.கே.47 துப்பாக்கியை வாங்கி அதை மேலே பிடித்தபடி சிரித்தபடி போஸ் கொடுத்தார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, பிரதீபாவின் போஸுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் ஒரு பொருளை கையில் தூக்கியபடி, புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார் குடியரசுத் தலைவர்.
அவரது புன்னகைக்கும், கையில் இருக்கும் துப்பாக்கிக்கும் சற்றும் பொருத்தமாக இல்லை. முப்படைகளுக்கும் அவர் தலைவர்தான் என்றாலும், இப்படி போஸ் கொடுத்தது தவறு.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது, சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த 'Stop or My Mom would shoot' என்கிற படம்தான் நினைக்கு வந்தது என்று கூறியுள்ளார் உமர் அப்துல்லா.
No comments:
Post a Comment