Friday, May 16, 2008

ராமகோபாலனை பொட சட்டத்தில் கைது செய்யவேண்டும்

 
ராமகோபாலன் சார் உங்களுக்கும் இந்த திவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்.அப்படிப்பாத்தா உங்களையும் போட சட்டத்துல போடவேண்டும் இல்லியா.நீங்களும் மதக்கலவரங்களை தூண்டிகிறீர்கள் அல்லவா.
 
உங்களை திருத்த முயற்சி செய்யுங்கள்.அப்பொழுது மற்றவர்கள் திருந்த ஒரு வாய்பு உண்டாகும்.நான் சொல்லுவது சரிதானுங்க.
 
 
 
சாவைப்பற்றி கவலை இல்லை: தீவிரவாதிகளை அடியோடு வேரறுக்க வேண்டும்-ராமகோபாலன் ஆவேசம்

சென்னை, மே. 16-

சென்னையில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதி களும் ராமகோபாலன் உள்பட இந்து அமைப்பு தலைவர்கள் சிலரை கொல்ல சதி திட்டத்துடன் செயல் பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக ராம கோபாலனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மத்திய அரசும் சரி தமிழக அரசும் சரி பயங்கரவாதி களிடம் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. பயங்கரவாதிகளை தீர்த்து கட்ட கடுமையான சட்டம் எதுவும் இல்லை.

எனவே தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தியோ அல்லது சிறுபான்மை என்ற கவசத்தை பயன்படுத்தியோ தப்பித்து விடலாம் என்று துணிந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரும்புக் கரம் கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும். மிக கடுமை யான முறையில் மீண்டும் பொடா சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மதகலவரத்தை தூண்டி னால் குண்டர் சட்டம் பாயும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது என்ன சட்டம் பாயப் போகிறதுப அல்லது சிறு பான்மையினர் என்ற உபச ரிப்போடு விட போகிறாராப என்பதÛ நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இப்படியே போனால் தமிழ்நாடும் ஜெய்ப்பூர் ஆகி விடும். தீவிரவாதிகளை அடியோடு வேரறுக்க வேண்டும்.

கோவையில் தீவிரவாதி கள் நடத்திய குண்டுவெடிப்பில் நூற்றுக் கணக்கானோர் பலியானார்கள். அந்த வழக் கில் இருந்து அனைவரும் தப்பி இருக்கிறார்கள்,

எனக்கு சாவைப்பற்றி கவலை இல்லை. தீவிரவாதத் துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails