அதிகாரபூர்வ பெயர் | இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசு Islamic Republic of Pakistan |
இருக்குமிடம் | தெற்கு ஆசியா, அரபிக்கடலின் எல்லை, ஆனால் இந்தியாவின் கிழக்கில் மற்றும் ஈரான் & ஆப்கானிஸ்தான் மேற்கில், சீனாவின் வடக்கில் |
பூகோள குறியீடு | 30 00 வடக்கு, 70 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 803,940 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 778,720 சதுர கி.மீ. |
கடற்கரை | 25,220 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | பாகிஸ்தான் ருபி (PKR) |
அண்டை நாடுகள் (எல்லை) | ஆப்கானிஸ்தான் 2,430 கி.மீ., சீனா 523 கி.மீ., இந்தியா 2,912 கி.மீ., ஈரான் 909 கி.மீ. |
தலைநகர் | லண்டன் |
சில துளிகள்:
1947ல் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து உருவாக்கிய நாடு. இதனால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு இன்னும் சுமூக தீர்வு கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாகிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் ஆளுமையை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து பங்களாதேஷ் என தனி நாடானது.
இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான இந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாகிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியாவின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அதிகம் பேர் பேசும் மொழி பஞ்சாபி. இரண்டாவது இடத்தில் சிந்தி மொழி.
அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது ராணுவத்தால் 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது.
தொழில் முன்னேற்றம் மிகக் குறைவு. இந்தியாவிற்கு சமமாக ராணுவபலத்தை பெருக்க முயற்சிப்பதால் ராணுவச் செலவு அதிகம்.
மிகுந்த வெளிநாட்டுக் கடன்களில் தத்தளிக்கும் நாடு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவிகரமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இப்பிரச்னை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு போதை மருந்துகள் செல்லும் வழிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
ஜனத்தொகை | 144,616,639 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 40.47% (ஆண் 30,131,400; பெண் 28,391,891) 15 - 64: 55.42% (ஆண் 40,977,543; பெண் 39,164,663) 65க்கு மேல்: 4.11% (ஆண் 2,918,872; பெண் 3,032,270) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 2.11% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 31.21 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 9.26 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 80.5 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 61.45 வருடங்கள் |
No comments:
Post a Comment