வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு செல்ல ஷாருக் கானுக்குத் தடை |
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கொல்கத்தாவில் நடந்த சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, தனது அணி வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமில் இருந்த ஷாருக்கைச் சந்தித்து இந்தத் தடையை கூறினர்.
இதுபோல இனிமேல் டிரஸ்ஸிங் ரூம் வரை நீங்கள் வரக் கூடாது. இனி வரும் போட்டிகளில் இதை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
ஐசிசியின் இந்த நடவடிக்கை குறித்து ஷாருக் கான் அதிர்ச்சியும், ஏமாற்றமும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வீரர்களுடன் இருக்கவே நான் விரும்புகிறேன். என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. ஐசிசியின் உத்தரவு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
எனக்கு ஐசிசியின் விதிகள் தெரியாது. கொல்கத்தா வந்து எனது அணி வீரர்களை நான் சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதை மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது அணி எப்போதெல்லாம் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுகிறதோ, அப்போதெல்லாம் நான் அவர்களுடன் இருப்பேன் என்றார் ஷாருக்.
No comments:
Post a Comment